பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சு. சமுத்திரம் ☐

பாழும் பெண்ணோ மீண்டும் அனாதை ஆனது போல் துடித்ததை நானே நேரில் பார்த்தேன். இந்த இரண்டு சம்பவங்களையும் இரண்டு சிறுகதைகளாக்கி அனுப்பினேன். பத்திரிகைகளில் பிரசுரமாயின, ஒன்று “சிறுகதை இதழில்” இன்னொன்று ‘குங்குமத்தில்’

பெங்களுர் தெரேஸா

எனது அலுவலகக் காரில் எம்.ஜி. ரோடில் போய் கொண்டிருந்தேன். எனது டிரைவர், ஒரு வயதான அம்மாவை நேராகக் குறிவைத்தது போல் மோதிவிட்டார். நேரடியான ஹிட். அந்த அம்மா சுருண்டு விழுந்தார். நானும் டிரைவரும், பதறிப்போய் அவரைத் தூக்கினோம். அருகே இருந்த போக்குவரத்து கான்ஸ்டேபிள் வழக்குப்பதிவு செய்யப் போனார். வழக்குப் பதிவானால் நான் டிரைவரை சஸ்பென்ட் செய்தாக வேண்டும். ஏற்கனவே அவர் இன்னொரு விபத்தில் ஒருவரைக் கொன்றவர். இந்தப் பின்னணியில், என்ன செய்வதென்று தெரியாமல், அந்தக் கான்ஸ்டேபிளைப் பார்த்து “ஒரு ஏழையை இன்னொரு ஏழைதான் காப்பாற்ற வேண்டும்” என்று மன்றாடினேன். அவரும் பெரிய மனது வைத்து, அந்த அம்மாளுக்கு ஆட்சேபம் இல்லை என்றால், வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுவிட்டு, தன்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது பெருந்தன்மையைப் பாராட்டி, அந்த அம்மாவை காரில் தூக்கிப் போட்டோம். அவருக்கு கால் முறிந்திருந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தார். ஆனால் இந்த மாதிரி சமயங்களில் விபத்துக்குள்ளானவர் திட்டுவாரே, அப்படித் திட்ட