பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சு. சமுத்திரம் ☐

கர்நாடக மாநில மக்களைப் பற்றி மிக அதிகமாக சிறுகதைகள் எழுதிய தமிழ் எழுத்தாளன் நான் தான் என்று நினைக்கிறேன். இதற்காக, கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அண்மையில் வெளியான ஒரு புத்தகத் தொகுப்பு என் மனதை வெகுவாகப் புண்படுத்திவிட்டது. கர்நாடக அரசு, தென்மாநில மொழிகளில் வெளியான இருபது சிறுகதைகளைத் தொகுத்து கன்னடத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வகையில், தமிழிலிருந்து 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடக அரசு சார்பில் கன்னடத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் என் கதை இடம் பெறவில்லை. சொந்த மொழிக்கதைகளைத் தொகுப்பவர்களுக்கு கர்நாடக மாநில மக்களைப் பற்றி தமிழில் வெளியான கதைகள் தெரிந்திருக்க வேண்டும். தெரியாதது, அந்தத் தொகுப்புக்கு நஷ்டமே தவிர, எனக்கல்ல. தமிழ் திறனாய்வும், பிறமொழி பெயர்ப்பும், முதுகு சொரிபவர்களுக்கே முக்கியத்துவம் ஆகிவிட்டது என்ற எனது கணிப்பை இந்தத் தொகுப்பு, மீண்டும் நிசப்படுத்தியிருக்கிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், ஒரு கட்டுரை தினமணியில் வெளியானது. பெங்களூர் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் நண்பர் கார்லோஸ் (தமிழவன்) இனிமையானவர். பெங்களுரில் நான் பணியாற்றிய போது, நானும், அவரும் சந்தித்து, விரிவாகப் பேசியிருக்கிறோம். அவர் பொறுப்பேற்ற ‘இன்று’ என்ற பத்திரிகையிலும், நான் தொடர் கட்டுரை எழுதியிருக்கிறேன். இந்த நண்பர், ‘சிறுக