பக்கம்:எனது நண்பர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100  எனது நண்பர்கள்


டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் 1945–ல் சான்பிரான்விஸ்கோவில் நடந்த ஐ.நா. மகாநாட்டில் இந்திய தூது கோஷ்டித் தலைவராகச் சென்று உரை நிகழ்த்தினார். பின்னர் 46–47ல் ஐ.நா. பொருளாதார, சமூக கவுன்ஸிலில் முதல் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர். ஏ. ஆர். முதலியார் 1931–முதல் 34 வரை டில்லியில் வணிக மந்திரியாகப் பணிபுரிந்தார். அப்போது தமிழகத்தில் தோல் வாணிகம் பாழ்படும் நிலைமையை அடைந்தது. தோல் விலை குறைந்தது. மேல்நாட்டுக்கு அனுப்பப்படும் தோல்களுக்குப் பணம் ஓராண்டுக்குப் பிறகுதான் தமிழகத்துக்குக் கிடைத்து வந்தது. இது குறித்துக் கவலையடைந்த சென்னைத் தோல் வணிக சங்கத்தினர், என்னிடம் வத்து, ஏ. ஆர். முதலியாரை தில்லியில் சந்தித்து ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உடன்பட்டேன். ஏழு பேர் ஒரு குழுவினராக தில்லிக்குச் சென்றோம். ஏ.ஆர். முதலியாரைச் சந்தித்தோம். அவர் வெகு பொறுமையாக ஒரு மணி நேரம் எங்களிடம் தோல் வணிகத்தின் குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்வதாக வாக்களித்தார். நான் கட்டாயம் செய்யவேண்டுமென வற்புறுத்தினேன். அப்போது அவர் என்னிடம் சொன்னதாவது “இதை விட வேறு எனக்கென்ன வேலை? நான் இங்கு வந்த பிறகு பல மாநிலங்களிலிருந்து பலபேர்கள் பல குறைகளைக் கூறி பல மந்திரிகளைப் பேட்டி காண வருவதைக் கண்டு, நமது மாநிலத்திலிருந்து இப்படி ஒருவரும் வந்து குறைகளைச் சொல்லிக் கொள்ள வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன். நீங்கள்தான் இப்போது முதல் தடவையாக வருந்திருக்கிறீர்கள். உட்காருங்கள்’’ என்று கூறி, தொலைபேசியை எடுத்து வர்த்தகத் துறைக் காரியதரிசியை அழைத்து இதற்கானவற்றை உடனே செய்யும்படி கட்டளையிட்டார். நன்றி கூறித் திரும்பினோம். எங்கோ போகிறீர்கள்?” என்று கேட்டார்.