பக்கம்:எனது நண்பர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  105

சென்னை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது அவருக்காக எதிர் வழக்காடிய பாரிஸ்டர் பன்னிர்செல்வம் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெரியாரைக்கட்டிப்பிடித்துக் கண்ணிர் உகுத்து அழஆரம்பித்து விட்டார். அவர்கள் இருவரையும் போலிசார் பெரும்பாடுபட்டேபிரித்தார்கள். பின் பல்லாரி சிறையில் நானும்அவரும் மட்டுமேபோய்ப் பெரியாரைப் பார்த்து வந்தோம். எங்களுக்குப் பல அரசியல் கருத்துக்களையும், நாட்டில் நாங்கள் செய்யவேண்டிய பணிகளையும் மிகத் தெளிவாகவும், பொறுமையாகவும் கடறி. எங்களைப் பெரியார்வழியனுப்பி வைத்தது எங்களைக் கலக்கமடையச் செய்தது.

அவர் பல்லாரி சிறையில் இருக்கும் போதுதான் சென்னை ஐலண்டு கிரவுண்டில் ஐஸ்டிஸ் கட்சி மகாநாடு நடந்தது. அவர் பல்லாரி சிறையில் இருந்ததால் அவர் படத்தையே தலைமையாக வைத்து மகாநாட்டை நடத்தினோம். அப்போது ஆந்திர, கேரள, கர்நாடக, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் பொதுச் செயலாளராகப் பணி புரிந்தேன். தலைவர் பெரியார் பல்லாரி சிறையில் இருந்ததால் அவரது தலைமை உரையின் முற்பகுதியை சர்.ஏ.டி. பன்னீர்ச்செல்வமும், பிற்பகுதியை நானும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். பெரியாருடைய கட்டளைப்படி அவரது பணிகளை சட்டசபைக்கு உள்ளே சர்.ஏ.டி. பன்னீர் செல்வமும், சட்டசபைக்கு வெளியே நானும் செய்து வந்தோம்.

இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை எட்டயபுரத்தில் நானும் டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சென்று நடத்தினோம். அப்போது அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் கருங்கற்களைச் சரமாரியாக அள்ளி வீசி அடித்து எங்களைக் கூட்டத்தை நடத்த விடாதபடி செய்தார்கள். ஆறு கல்லடிகள் பட்டு இரத்தம் சொட்டியதும் நாவலர் பாரதியார் எழுந்து