பக்கம்:எனது நண்பர்கள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110  எனது நண்பர்கள்
 

தால் இராஜினாமா செய்து, அது பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு, என் தொழில்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சட்டசபை உறுப்பினர் என் இல்லத்திற்கு வந்தார். அவர்:

“நான் ஒரு காங்கிரஸ் கட்சியினன். சென்னையிலிருந்து வரும் வழியில் தங்களைப் பார்த்துப் போக வந்தேன். தலைவர் காமராஜரும் நானும் இப்பொழுது கூடத் தங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். தங்கள் மீது அவருக்கு அன்புண்டு. தங்களைப் போன்றவர்களெல்லாம் காங்கிரசில் இருக்க வேண்டுமென்பது அவரது எண்ணம். அவ்வாறு தாங்கள் விரும்பினால், அவர் தன்னுடைய பதவியைக் கூடக் காலி செய்து கொடுக்கத் தயங்க மாட்டார்” என்று கூறினார். நன்றி கலந்த வணக்கங் கூறி அனுப்பிவிட்டேன். அவர் கூறியது உண்மையாக இருக்குமானால், திரு. காமராஜர் அவர்களுக்குத் தம் கட்சியின் மீதுள்ள பற்றுதலின் அளவையும், பிற கட்சியைச் சார்ந்தவர்களின் மீது வைத்துள்ள மதிப்பின் உயர்வையும் எடுத்துக் காட்ட, இது போதுமானது என்றே கூறலாம்.

அடுத்தடுத்து அவரே தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பொழுது, அவருக்ருக் கட்சியிலும் நாட்டிலும் செல்வாக்கும் மதிப்பும் உயர்ந்துகொண்டே வருவதை மக்களால் நன்கு அறிய முடிந்தது. நேர்மையும், ஒழுக்கமும், சட்டதிட்டங்களில் ஒழுங்கும், பண வரவு செலவுகளில் கண்டிப்பும் உடையவரென நான் கேள்விப்பட்ட பொழுது பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஜஸ்டிஸ் கட்சிக்கு நாடார் சமூகத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கிறதென்றும், அதற்குக் காரணம் செளந்திரபாண்டியனுக்குக் கட்சியில் செல்வாக்கு இருக்கிறதென்றும், அதை ஒழித்து அச்சமூகத்-