பக்கம்:எனது நண்பர்கள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒப்பற்ற தலைவர் செல்வா!

செல்வநாயகம் எனது நண்பர். அவரது அருந்தொண்டுகளை நான் பல்லாண்டுகளாக நன்கறிவேன். உழைப்பிலே கடுமை, தொண்டிலே தூய்மை, சொல்லிலே எளிமை, வாழ்விலே நேர்மை-என்றால், அது செல்வ நாயகம் என்று பொருள். அதனாலேயே, அவர் ஈழத்தின் தந்தை என அருமையாக அழைக்கப்பெற்று வருகிறார்.

அவரது எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்று. அது நாடு செழித்து, மொழி வளர்ந்து, மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே. இந்த ஒரே நோக்கத்திற்காக அவர் பல்லாண்டுகள் இராப்பகலாக உழைத்து வருகிறார்.

ஏறத்தாழ எங்கள் இருவருக்கும் ஒரே வயது என்றாலும், அவர் நாட்டிற்காக, மக்களுக்காக ஓயாது உழைத்து உருக்குலைந்து அதிக வயதினராகவே காணப்படுகிறார். இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களில் பலர் நாடு அழிகிறதே, மொழி அழிகிறதே, வாழ்வு பாழாகிறதே என்று எண்ணி எண்ணி, வருந்தி உடல் நலம் கெட்டு இளைத்துப் போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைத்துப்போன மக்கள் பலரைக் கண்டதனாலேயே திரு செல்வநாயகம் அவர்களின் உடலும் இளைத்துப் போய் விட்டதெனத் தெரிகிறது.

நான் இலங்கைக்கு ஏழு தடவைகள் சென்று வந்திருக்கிறேன். அவர் இல்லத்திற்கு நானும், என் இல்லத்திற்கு

எ. ந.—8