பக்கம்:எனது நண்பர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  131

சிங்கம் அவர்களிடமிருந்து வந்த கேள்விகளனைத்தும் அரசியற் கட்சிப் போராட்டங்களை நடத்துவதுபற்றியும், 1938இல் தென்னகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றியுமே இருந்தன. அதிலிருந்து அவருடைய திட்டமிட்டு செயலாற்றும் ஆற்றல்கள் நன்கு விளங்கின.

ஒரு நாள் திரு வன்னியசிங்கம் அவர்களுடய இல்லத்தில் வெளிப்புறச் சுவரில் “தமிழ்த் துரோகி” என்று பெரிய எழுத்துக்களில் இரவில் எழுதப் பெற்றிருந்தது. நாமாக இருந்தால் வெட்கத்தினால் அதை உடனே அழித்திருப்போம். ஆனால் மறுநாட் காலை வெளி நாட்டிலிருந்து வந்த அவர், அதைக் கண்டதும் அழிக்காது பெருஞ்சிரிப்புச் சிரித்தார். அன்று மாலை அவர் பேசிய ஒர் பொதுக் கட்டத்தில் சொன்ன சொற்கள் இவை:—

“நான் ஊரில் இல்லாதபொழுது என்னைப் பார்க்க வருபவர்கள் தங்கள் பெயரைக் குறித்து வைக்கும் புத்தகம் ஒன்றை வீட்டில் வைத்துப் போவது வழக்கம். ஆனால் நேற்று நானும் இல்லை; என் மனைவியும் இல்லை. என்னை பார்க்க வந்தவர், பாவம்! தன் பெயரை என் விட்டில் வெளிப்புறச் சுவரில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார். அவர்தான் திருவாளர் ‘தமிழ் துரோகி.’ இது குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்” என்பதே. இது அவரது அறிவுத் திறமையையும் பண்பாட்டையும் விளக்கப் போதுமானதாகும்.

ஓர் உயர்ந்த சைவ வேளாள குடும்பத்தில் பிறந்த நண்பர் வன்னியசிங்கம் அவர்கள். தமிழ் மக்களிடையே தாண்டவமாடும் சாதிப் பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதிலும் முன்னணியில் நின்றவர். தாழ்ந்த சாதி எனப்படுவோருடன் கூட அமர்ந்து சமபந்தி போசனம் செய்பவர். மேலும் 1956 ஆம் ஆண்டளவில் நல்லூர்