பக்கம்:எனது நண்பர்கள்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
134  எனது நண்பர்கள்
 

இந்தியாவின் வரலாற்றிலேயே காணமுடியாத ஒரு நிகழ்ச்சி அண்ணாமலைப் பல்கலைக் கழக அமைப்பு ஆகும். செட்டி நாட்டு அரசர் அவர்கள் தம் சொந்தப் பணத்தைக் கொண்டு இப் பல்கலைக் கழகத்தை நிறுவியதைக் கண்டு, தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் பலர் பாராட்டினர். இதன் விளைவாகவே அவருக்குக் “கொடை வள்ளல்’’ என்ற பட்டம் வழங்கப் பெற்றது.

இப் பல்கலைக் கழகத்தில் ‘சாஸ்திரி ஹால்’ என்று ஒன்று உண்டு. அதில் எல்லாக் கூட்டங்களும் நடைபெறும். தமிழ்க் கூட்டம் ஒன்று மட்டும் நடைபெறாது. இச் செய்தியை அறிந்த நான் அரசரிடம் முறையிட்ட பொழுது அவர்கள் என்னையே அழைத்துத் தமிழ்க் கூட்டம் ஒன்றைத் தானே வந்திருந்து நடத்தி, நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கும்படி செய்தும் மகிழ்ந்தார்கள். இது நான் பெற்ற பேறுகளில் ஒன்று.

அப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் அரசியல் கட்சிக் கொடிகள் பலவற்றைக் பலவிடங்களில் தரையில் மட்டுமல்ல மரத்தின் மீதும் உயர உயரக் கட்டிப் பறக்க விட்டிருந்தனர். இதனைக் கண்ட அரசர் வருந்தி என்னை அங்கு வரவழைத்தார். ஒரு நாள் மாணவருடன் மாலையும் இரவும் பேசி அக்கொடிகள் அனைத்தும் அகற்றப் பெற்றன. அரசர் பெரிதும் மகிழ்ந்தார்கள.

சரியான ஆண்டு என் நினைவில் இல்லை. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி மகாநாடு தஞ்சை நகரில் நடந்தது. அம்மகாநாட்டின் பெரும்பணி அதற்கு ஒரு தலைவரைத் தேர்ந்து எடுப்பது. இதற்காகப் போட்டியிட்டவர் பொப்பிலி அரசரும், V. முனிசாமி நாயுடும் ஆகிய இருவர். இருவரும் போட்டி