பக்கம்:எனது நண்பர்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சோ. சு. பாரதியார்

எட்டையாபுரத்து மண்

ட்டபொம்மன் வரலாற்றைப் படிக்கும் பொழு தெல்லாம், எட்டையாபுரத்து மண்ணின்மீது ஒரு வெறுப்புத் தோன்றும். “தமிழ் வாழ்க” என்று ஒலித்த தமிழர்களின் தலையில், அங்குள்ள தமிழர்களே கல்லாலடித்துக் செங்குருதியை வழியவிட்ட வரலாறும், அம் மண்ணை வெறுக்கச் செய்யும். என்றாலும் தமிழ் வளர்த்த மன்னர்களை தமிழ் வளர்த்த புலவர்களை, தமிழ் வளர்த்த பாரதிகளை வளர்த்த மண் என்ற எண்ணமும் உடனே வரும். மனம் மாறும்; புண் ஆறும்.

மணியும் முத்தும்

தந்தை சுப்பிரமணியம், தாய் முத்தம்மாள். இந்த மணியிலிருந்தும் முத்திலிருந்தும் பிறந்த தமிழ் ஒளியை நிலவொளி என நினைத்தோ, தந்தையின் நெருங்கிய உறவினரும் அக்காலப் பிரசங்க கேசரியுமாகிய திரு. சோமசுந்தரநாயகரை எண்ணியோ, இவ்வொளிக்குச் சோமசுந்தரம் எனப் பெயரிட்டனர். பிறந்த ஆண்டு 1879).

சோ. சு. பாரதி

இது சோமசுந்தர பாரதி என்றாகாது. சோமு பாரதி சுப்பு பாரதி என்ற இரட்டையர்களைக் குறிக்கத்-