பக்கம்:எனது நண்பர்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40  எனது நண்பர்கள்

தோன்றிய ஒரு சொற்றொடர். சோ. பாரதியின் விட்டிற்குப் பக்கத்து வீடே சுப்பிரமணிய பாரதியின் வீடு. சோ. பாரதிக்கு சு. பாரதி மூன்றாண்டுகளுக்கு இளையவர். இருவரும் தோழர்கள். இவ்விருவரின் பெற்றோரில் எவரும் தமிழ்ப் புலவரல்லர். இருந்தும், இவர்கள் இருவருக்கும் தமிழில் ஒரு வெறி தோன்றியது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

சந்தேகப் பாரதி

மூன்று வயதில் சம்பந்தர் எப்படித் தேவாரம் பாடினார் என்ற சந்தேகம் சோ பாரதிக்கு இருந்தது. அத்தகைய சந்தேகப் பாரதியை ஏழு வயதில் வெண்பாவைப் பாடிக்காட்டி நம்ப வைத்தவர் சுப்பிரமணிய பாரதி.

பயங்கொள்ளிப் பாரதி

திண்ணைப் பள்ளிக்கூடத்திலோ, தமிழாசிரியர்களிடத்திலோ இவர்களிவரும் தமிழ் படித்ததில்லை. இவர்கள் இருவரும் தமிழ்படித்தவிடம் எட்டையாபுரத்துச் சிவன்கோயிலின் உட்பிரகாரத்து வாகன மண்டபம். அதிலும் பெற்றோர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், வாகனத்தின் மறைவிலிருந்து தமிழ் படித்தவர்கள். காரணம், ‘தமிழ் படித்தால் அடி உறுதி’ என்ற அச்சமேயாம். நீங்கள் எப்போதாவது எட்டையபுரத்துக்குச் சென்றால், தமிழ்த் தாய் இப்பிள்ளைகளுக்கு, அன்பால் தன்பால் கொடுத்து வளர்த்த அவ்விடத்தையும் அவர்கள் புத்தகங்களை மறைத்து வைத்திருந்த கோவில் வாகனங்களையும் பார்த்து மகிழுங்கள்.

பட்டம் பெற்ற பாரதி

ஆம், கடையம் என்ற ஊரில்தான் சுப்புவிற்குத் திருமணம் கூடியது. சோமு இல்லாமல் சுப்புவின் திருமணம் நடைபெறுமா? எல்லாரும் கடையம் சென்றனர். மணக்கோலத்திலிருந்த சுப்பிரமணியத்திற்கும், தோழ-