பக்கம்:எனது நண்பர்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  43

இவர் மூன்று ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இம்மூன்று நூல்களும் தமிழ் அறிஞர்களுக்குப் பெருவிருந்தளிப்பன.

தொல்காப்பியப் பாரதி

தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தை ஆராய்ந்து அகம், புறம், மெய்ப்பாடு ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் விளக்கம் எழுதித் தனித்தனி நூல்களாக வெளியிட்டிருக்கின்றனர். இன்னும் சில கருத்துக்கள் அச்சிடப்படாமல் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கும் ஒரே புலவன் பாரதி. இவர்களோடு தொல்காப்பியத்தின் பரம்பரைப் புலமை அற்றுப் போகாதிருக்க வேண்டுமே என்ற கவலை, இன்றைய தமிழறிஞர்களுக்கு உண்டாக வேண்டும் என்பதே என் கவலை.

நூலாசிரியர் பாரதி

“தமிழகமும் பழந்தமிழ் நூல்களும்” என்ற பெயரில் ஓர் அரிய நூலை ஆங்கில மொழியில் எழுதி உலக நூலாசிரியர் குழுவில் ஒருவராகத் திகழ்பவர் பாரதி. தமிழை, தமிழரை, தமிழகத்தை அறிய விரும்பும் பிற நாட்டினர்க்கு, இந்நூல் பெருந்துணையாக இருந்து வருகிறது.

சீர்திருத்த வீரன் பாரதி

சாதி வெறி தலைவிரித்து ஆடி நின்ற அக்காலத்திலேயே சாதிமுறை ஒழிந்தாக வேண்டும் என எழுதி, பேசி, நடந்து காட்டியவர் பாரதி. அக்காலத்தில் தம் திருமணத்தையே தமிழ்த் திருமணமாக நடத்திக்காட்டியவர்.

அரசியல் தலைவன் பாரதி

இளமையிலிருந்தே பாரதி சிறந்த தேச பக்தர்; வ.உ.சியுடன் இருந்து பெருந்தொண்டு செய்தவர். வர மறுத்துங்கூட காந்தியடிகளைக் கட்டாயப்படுத்தித் தூத்துக்-