பக்கம்:எனது நண்பர்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44  எனது நண்பர்கள்

குடிக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தவர் என்றும் பாரதியாருக்கு, காந்தியடிகள் மீது மாறாத அன்பு உண்டு.

நடுநாள் கண்ட பாரதி

ஆரியர்களுக்கு நாள் தொடக்கம் காலை 6 மணி. அராபியர்களுக்கு நாள் தொடக்கம் மாலை 6 மணி. ஐரோப்பியர்களுக்கு நாள் தொடக்கம் நள்ளிரவு 12 மணி. ஆனால் தமிழர்களின் நாள் தொடக்கம் நண்பகல் 12 மணி எனக்கண்டு கூறியவர் பாரதி. இக்கருத்தை அரண் செய்வது புறம் 280இல் ‘நடுநாள் வந்து’ என்ற. சொற்றொடர்.

சான்று காட்டும் பாரதி

பல சமயங்களில் பாரதியார் கூறும் முடிவைவிட அவர் காட்டும் சான்று சிறப்புடையதாகவிருக்கும். அவற்றுள் ஒன்று இது. ‘திருவள்ளுவ மாலை வள்ளுவர் காலத்திலேயே பாடப்பெற்றது அல்ல’ என்பது பாரதியின் முடிவு. அதற்கவர் காட்டும் சான்று உயிரோடிருக்கும் காலத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டுகின்ற வழக்கம் தமிழ்ப் புலவர்கள் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரையில்லை’ என்பதே.

பேராசிரியர் பாரதி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அழைப்பை: ஏற்று, மதுரையில் தாம் நடத்தி வந்த வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டுச் சென்று, ஐந்து ஆண்டுக் காலம் பேராசிரியராக இருந்து தமிழ்ப்பணி செய்து வந்தவர். இது 1988 முதல் 1988 வரையாகும்.

பெரும் புலவன் பாரதி

பாரதியார் பழங்காலத்துப் பெரும் புலவர்களில் ஒருவராக விளங்கியவர். அவரோடு ஒத்த புலவர்கள் பலர். அவர்களிற் குறிப்பிடத் தகுந்தவர்கள்: வெள்ளக்கால் திரு வி.பி. சுப்பிரமணிய முதலியார். உ. வே. -