பக்கம்:எனது நண்பர்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46  எனது நண்பர்கள்

மறுத்துத் திருச்சியில் உள்ள கரூரில் கடற்கரைப் பகுதி: இல்லையென்பதை எடுத்துக்காட்டிச் “சேரநாட்டுக் கடற்கரைப் பகுதியிலுள்ள பட்டினமே வஞ்சியும், கரூரும் ஆகும்” என நிலை நாட்டினார். காலப் போக்கில் உண்மை பாரதியாரையே தழுவியது.

நாவலர் பாரதி

சுவாமி விபுலானந்தர் அவர்களின் அழைப்பினை ஏற்றுப் பாரதியார் இலங்கைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழ்மழை பொழிந்தார். மனங்குளிர்ந்த அங்குள்ள புலவர் பெருமக்களால் வாழ்த்தி வழங்கப்பெற்ற பட்டமே “நாவலர்” பட்டமாகும். ஒல்லும் வகையெல்லாம் ஓயாமல் தொண்டுசெய்து மொழியை வளர்த்த மூதறிஞர் நாவலர்க்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர், சென்னை மாநிலம் முழுவதையும் கூட்டி வைத்து வழங்கி மகிழ்ந்த பட்டமே ‘டாக்டர்’ பட்டமாகும்.

உணர்ச்சி வெள்ளம் பாரதி

சுப்பிரமணிய பாரதி புதுச்சேரி சென்று செயலிழந்து இருந்தபோது எவரும் எதுவும் பேசாதிருந்தனர். காரணம் அவரைப்பற்றிப் பேசினால், அது “'அரசத், துரோகக் குற்றம்’” ஆகும் என்பதே. அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியைப் புதுச்சேரியில் விட்டு வைத்திருப்பது தமிழுக்கு ஓர் இழப்பு, தமிழனுக்கு ஓர் இழிவு. தமிழகத்திற்கு ஒரு மானக்கேடு என்று எழுதிப் பேசிக் கண்டித்துச் செய்தித்தாள்களில் வெளியிட்டுப் பயனை எதிர்பார்த்திருந்த உணர்ச்சிவெள்ளம் பாரதியின் உள்ளம். இதற்காக விடுதலை பெற்று வந்ததும் சு. பாரதி, சோ. பாரதியைக் கட்டித் தழுவிக் கண்ணீருகுத்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

இத்தகைய உயர்ந்த தமிழ் மகனாரது நூல்களைப் படித்துப் பயன்பெற வேண்டியது தமிழ் மக்களின் தலை சிறந்த கடமையாகும். வாழட்டும் பாரதியின் புகழ்! வளரட்டும் தமிழ்மொழி!