பக்கம்:எனது நண்பர்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேராசிரியர்
கா. நமச்சிவாய முதலியார்

“50 ஆண்டுகட்கு முன்பு எனது பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் இல்லத்தில் ஒரு திருமணம். அத்திருமணத்தில் ஒடி ஆடி திருமண வேலைகளைச் செய்து கொண்டிருந்த ஒருவரை ‘யார்’ என்று விசாரித்தேன். ‘அவர்தான் கி. ஆ. பெ. விசுவநாதம் என்று ஒருவர் அறிவித்தார்” ஏன்று சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார்.

அவ்வளவு தொடர்பு பேராசிரியர் நமச்சிவாய முதலியார் அவர்களிடத்தில் எனக்கு உண்டு. அவரது. தமிழ்ப்பற்றும், தமிழ்த்தொண்டும் என்னை அவர் பக்கம் இழுத்து இருக்கிறது.

திரு. நமச்சிவாயர் அவர்கள் சென்ற நூற்றாண்டுப் புலவர். 1876-இல் பிறந்தவர். இந்த ஆண்டு (1976) அவரது நூற்றாண்டு விழா ஆண்டு.

இவரது தந்தை திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். தந்தையிடமே கல்வி பயின்று, பதினாறு வயதிலேயே ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தவர். மகாவித்வான் சண்முகம்பிள்ளை அவர்களிடம் பல ஆண்டுகள் தமிழ் நூல்களைக் கற்றுத் தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தார். பிறகு பல உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகத் திகழ்ந்து, 1914இல் மேரிராணி கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். 1920 முதல் 14 ஆண்டுகள் அரசாங்கத் தமிழ்க் கல்விக்குழுவின் தலைவராகப்