பக்கம்:எனது நண்பர்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48  எனது நண்பர்கள்

பணிபுரிந்தவர். அக்காலத்தில்தான் திரு. வி. க. அவர்களோடு சென்று முதல் முதலாக அவர்களைக் கண்டு பேசி மகிழ்ந்தேன்.

அவரது அமைதியான வாழ்க்கையும், அன்பு கலந்த இனிய சொல்லும், எவரையும் தன் வசம் இழுத்துவிடும். அவர் எழுதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்று வந்தன. மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வந்தன.

இதுவன்றி, நூல்கள் பலவும் எழுதித் தமிழ்மக்களுக்கு வழங்கியவர். இவற்றுள் குறிப்பிடத் தக்கவை கீசகன், பிருதிவிராஜன், ஜனகன், தேசிங்குராஜன் என்னும் நூல்களாகும். எல்லாவற்றையும்விட ஐனவிநோதினி’ என்ற திங்கள் இதழில் அவர்கள் எழுதிவந்த கட்டுரைகள் பல தமிழ் மக்களைத் தட்டி எழுப்பின; அவ்வாறு உணர்ச்சி ஊட்டி எழுப்பப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

ஒழுக்கத்திற்கு மதிப்பளிக்கும் ஆத்திச்சூடி, வாக்குண்டாம் நல்வழி, நன்னெறி முதலிய நீதி நூல்களைப் பெரிதும் போற்றியவர். அவைகளுக்கு உரை எழுதி மக்களுக்கு வழங்கித் தமிழ் மக்களுடைய ஒழுக்கத்தை வற்புறுத்தி வளர்த்தவர். அவ்வுரைகள் எனக்குப் பெரிதும் பயன்பட்டன.

“தொல்காப்பியப் பொருளதிகாரம்'”, “தஞ்சை வாணன் கோவை”', “இறையனார் களவியல்” ஆகிய பெருநூல்களைப் பதிப்பித்து, அவர் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

தை முதல் நாளை தமிழ் மக்கள் தமிழ்த் திருநாளாக, திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கண்டு, தோற்றுவித்து. கட்டளையிட்டு நடத்திக் காட்டி நிலைநிறுத்தி மறைந்தவர். அப்பணியை அவர் வழியில் நான் இன்றளவும் நடத்தி வருகிறேன். நான் மட்டுமல்ல தமிழ்த் திருநாளையும் திருவள்ளுவர் திரு-