பக்கம்:எனது நண்பர்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50  எனது நண்பர்கள்

கூறுவதாகுமே தவிர, தமிழுக்குச் சிறப்பு கூறுவதாக இராது. தமிழுக்கே உள்ள தனித் தன்மையை எடுத்துக் கூடறுவதே தமிழுக்குச் சிறப்பு கடறுவதாகும்” என விளக்கினார். இதை என் உள்ளம் ஒப்பியது மட்டுமல்ல, “தமிழின் சிறப்பு” என்னும் நூலை நான் எழுதுவதற்கு இது அடிப்படையாகவும் அமைந்து விட்டது.

திரு முதலியார் அவர்கள் ஒரு புலவர் மட்டுமல்ல, அவர் ஒர் பெருஞ் செல்வர் என்பதை நீலகிரி, உதக மண்டலத்திலுள்ள அவரது இரு மாளிகைகளும், அதில் மொய்த்துக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களின் கூட்டமும் காட்டும்.

பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்கள் நல்லாசிரியராக இருந்து துணைவேந்தர் நெ. து. கந்தர வடிவேலு, நிதி அமைச்சர் சி. கப்பிரமணியம், தலைமை நீதிபதி பி. எஸ். கைலாசம், இந்தியப் பேரரசின் முன்னாள் அமைச்சர் ஒ. வி. அளகேசன் முதலியவர்களையெல்லாம் மாணவராக ஏற்று, தகுதியுடையவர்களாக ஆக்கித் தமிழகத்திற்கு உதவியவர்.

இத்தகைய ஒரு நல்லறிஞரைத் தமிழகம் இழந்து விட்டது. இது தமிழுக்கும் தமிழருக்குப் பேரிழப்பாகும். அவர் இன்று இல்லாவிட்டாலும் அவரது தொண்டு என் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது. துணை வேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு, சென்னை நக்கீரர் கழகச் செயலாளர் திரு. சிறுவை மோகனசுந்தரம் போன்ற பல நல்லறிஞர்களின் உள்ளத்திலும், அவர் நின்று நிலவி வருகிறார். இது போதாது. தமிழும் தமிழரும் தமிழகமும் உள்ளவரை அவரது புகழ் நின்று நிலைத்திருக்க வேண்டும்.