பக்கம்:எனது நண்பர்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  55
 
சங்க உறுப்பினர்கள் யாராயிருந்தாலும், அவர்களது இல்லத்தில் இறந்தது சிறு குழந்தையாக இருந்தாலும், பல மைல்களுக்கப்பால் இருந்தாலும், தவறாமல் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறும் பண்பு அவரிடம் குடி கொண்டிருந்தது. தமிழுக்குத் தொண்டு செய்வதைவிட, சங்கத்தை வளர்ப்பதைவிட, வழக்கறிஞர் தொழிலைக் காப்பாற்றுவதைவிட, உண்மையையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் காப்பாற்றுவதில் தலைசிறந்து விளங்கினார்.

கொடை

பிறருக்குத் தெரியாமல் கொடை வழங்கும் கொடையாளி அவர். அதிலும் பள்ளியில் பயிலும் பல குழந்தைகளுக்குச் சம்பளம், புத்தகம். உடை முதலியவைகளுக்கு வழங்கிவந்தது பாராட்டுதற்குரியது.

பயிற்று மொழி

தமிழகத்தில் ஆங்கில மொழி பயிற்று மொழியாக இருப்பதற்கு வருந்தித் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்த பேரறிஞர் அவர்.

இறுதியாக அவரது உடல் இத்தமிழ் மண்ணில் கூடப் புதைக்கப்பட முடியாமல் வடநாட்டு மண்ணில் புதைக்கப்பட்டுப் போயிற்று. இதை எண்ணி ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டேன். வேறு என்ன செய்ய இயலும்?

தஞ்சை உள்ளவரை, கரந்தை உள்ளவரை, தமிழ்ச் சங்கம் உள்ளவரை, தமிழ்க் கல்லூரி உள்ளவரை, மட்டுமல்ல, தமிழர் உள்ளவரை, தமிழ் உள்ள வரை, தமிழகம் உள்ளவரை அவரது புகழும் மறையா.

1938-ல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் பெரும் போரை நடத்த எனக்கு உற்ற துணையாக இருந்து