பக்கம்:எனது நண்பர்கள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம் கி  63
 

வற்புறுத்தித் செயல்படுத்துவதே நம் தமிழ் இலக்கியங்களின் உயிரோட்டமாகும். இத்தகைய பணியே. தமிழகத்துச்சான்றோர்களாகிய தமிழ்ப்பெரும் புலவர்கள் சங்க காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் நம் நாட்டில் செய்து கொண்டு வந்திருக்கின்றனர்.

அவர்களின் வழியில் கடந்த நூற்றாண்டிற் பிறந்தவர்களில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவவர், பூவை கல்யாணசுந்தர முதலியார், சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள், நா. கதிரை வேல் பிள்ளை, மறைமலை அடிகள், திரு. வி.க., வ. உ. சிதம்பரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், தமிழ்க் காசு எம். எல். பிள்ளை நாட்டார் ஐயா முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

இவர்களில் நாட்டுக்கும், மொழிக்கும் சமூகத்துக்கும் தொண்டு செய்யக் கருதிக் கவிதைகளைச்செய்து பெரும் பணி புரிந்தவர்கள். தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையும் ஆவர்.

இப்பரம்பரையில் இக்காலத்தில் தோன்றி மறைந்த ஒரே கவிஞர் கனக சுப்புரத்தினம் ஆவார். இவரது கவிதைகளில் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும், சமூகப்பற்றையும் ஒருங்கே காணலாம்.

சமூக சீர்திருத்தத்தில் சாதிகள் ஒழிய, வறுமைகள் ஒழிய, தீண்டாமை அழிய, விதவை மணம் புரிய, பெண்னுரிமை பேண, கலப்பு மணம் செய்ய, பொருளாதாரம் வளர, தமிழ் மொழியைப் போற்ற புரட்சியைச் செய்த பெருமை இவரையே சாரும். இதனால் இவர் புரட்சிக் கவிஞர் என்ற பெயரைப் பெற்றார்.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரிடம் இவருக்குப் பெருமதிப்பு உண்டு. அவருடைய தொண்டிலும்,