பக்கம்:எனது நண்பர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64  எனது நண்பர்கள்

கவிதையிலும் பெரும்பற்றுக்கொண்டு அவரை ஆசிரியராகவும் கொண்டவர். இதனாலேயே அவர் பாரதிதாசன் என்ற பெயரும் பெற்றார்.

இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்கு ஈடு இணையான கவிதைகளை இயற்றுகின்ற ஆற்றலைப் பெற்ற புலவர்கள் எவரும் தோன்றவில்லை. இவரது பாடல்கள் பல்வேறு சுவைகளையும் ஒருங்கே தருவன.

45 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பாடல்களைத் திரட்டி ‘பாரதிதாசன் கவிதைகள்’ என நூலை வெளியிடும் தொண்டில் நான் பங்கு பெற்றேன். அதற்கு அவர் மதிப்புரை ஒன்றை வேண்டியபொழுது நான் எழுதித் தந்தது இது:

“கதைக்காக ஒரு முறை, கவிதைக்காக ஒரு முறை, கற்பனைக்காக ஒரு முறை, இன்பத்துக்காக ஒரு முறை, அதன் எழிலுக்காக ஒரு முறை, சுவைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை படித்தேன். அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படி–தேன் என ருசித்தது” என்பதே.

இவரது பரம்பரையாக இன்று தமிழகத்தில் பல இளம் புலவர்கள், கவிஞர்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சுரதா என்பவர். சு-சுப்பு, ர-ரத்தினம், த-தாசன், எனத் தன் பெயரிலேயே புரட்சிக் கவிஞரின் பெயரையும் வைத்துக் கொண்டவர்.

இவரைப் போன்ற கவிஞர்கள் ஏராளமானவர்களைத் தமிழகம் பெற்றிருக்கிறது. இத்தகைய அறிஞர்கள் அனைவரையும் பாரதிதாசன் பரம்பரையே எனக்கூறலாம். இத்தகைய பரம்பரை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரவேண்டுமென்பதே என் விருப்பம். வளரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

இக்காலத்திலும் எல்லோரும் கவிபாடலாம் என்றும், அதற்கு இலக்கணமே தேவையில்லை என்றும் ஒரு கருத்துப் பரவி வருகிறது. சில கவியரங்குகளில் பாடப்பெறு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/65&oldid=986325" இலிருந்து மீள்விக்கப்பட்டது