பக்கம்:எனது நண்பர்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

மூவரின் வரலாற்றுச் செய்திகளையும் தனி நூலாக வெளியிட எண்ணியுள்ளேன். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் ஓய்வும் கிடைக்க இறைவன் துணை புரிய வேண்டும்.

என் வாழ்நாளில் இப்பேரறிஞர்களோடு பழகிய பேற்றை ஒரு பெரும்பேறாகவே கருதி மகிழ்கிறேன். அவர்களின் பண்பும், பழக்க வழக்கங்களும் வழி காட்டுதலும், அறிவுரைகளும் எனக்குப் பயன்பட்டன. அவைகளை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன். உங்களுக்கும் பயன்படுமா? என்று பாருங்கள். பயன்படுத்திக் கொண்டால் மகிழ்வேன்.

என் நூல்கள் அனைத்தையும் அச்சிட்டு வழங்கியதுபோலவே இந்நூலையும் அச்சிட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய சென்னை பாரிநிலையத்தாருக்கும், ஜீவோதயம் அச்சகத்தாருக்கும், மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நடுவர் உயர் திரு. பு. ரா. கோகுலகிருஷ்ணன் எம்.ஏ.பி.எல்., அவர்கட்கும் என் நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திருச்சிராப்பள்ளி–8 தங்களன்பிற்குரிய,

27–3–84 கி. ஆ. பெ. விசுவநாதம்