பக்கம்:எனது நண்பர்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70  எனது நண்பர்கள்

உயிரோடிருக்கிறார்களே” என்று வருந்தியவர் பாரதியார். “இவர்கள் இருவரும் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்களே” என்று வருந்தியவர் திரு.வி.க.

ஒரே மேடை

இம் மூவரையும் ஒரே மேடையிற் காண்பது என்பது எவராலும் இயலாது. என் வாழ்நாளிலேயே ஒரு முறைதான் அத்தகைய வாய்ப்பு எனக்கு சென்னையில் கிடைத்தது.

ஒரே பெயர்

இத் திருமூர்த்திகளையும் ஒரு மூர்த்தியாக்கி திரு.வி.க. மறைமலைப் பாரதியார் என தமிழ் உலகிற் கூறுவதுண்டு. காரணம் இம் மூவரும் தமிழே ஆழ்ந்து, தமிழே பேசி, தமிழ் உருவம் பெற்ற ஒன்றினாலேயே ஆம்.

முதுமை

ஆண்டுகள் அறுபதை மூவரும் கடந்து, முதுமையைப் பெற்று, உடலும் தளர்ந்து, உணர்வும் தளர்ந்து, பொதுத் தொண்டுகளுக்கும் ஒருவாறு முடிவு கட்டிவிட்டனர் என்றும் கூறலாம்.

இளமை

என்றாலும், இன்றைக்கும்கூட தமிழுக்கு ஊறு என்று கேள்விப்படுவார்களானால், அவர்களின் உள்ளத் லும், உணர்ச்சியிலும், உடலிலுங்கூட- இளமையின் தோற்றத்தை எளிதிற் காணலாம்.

ஒத்த உள்ளம்

“தமிழ்மொழி தனிச் சிறப்புடையது. தனித்து இயங்கும் தன்மையுடையது. எந்த மொழியின் துணையும் அதற்கு எள்ளளவுந் தேவையில்லை. தமிழன் தமிழை முன்னிறுத்தி தமிழ் வாழ்வு வாழவேண்டும்” என்பதில் இம் மூவரும் ஒத்த உள்ளம் படைத்தவர்கள்.