பக்கம்:எனது நண்பர்கள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நான்கு தலைவர்கள்

“சமயாச்சாரியர்கள் நால்வர்”, ‘சந்தானாச்சாரியார்கள் நால்வர்’ என்று கேள்விப்பட்ட உங்களுக்கு, தமிழ் நாட்டுத் தலைவர்கள் நால்வர் என்பது புதிதாகத் தோன்றலாம். ஆம்; தமிழ்நாட்டின் தலைவர்கள் நால்வர்கள்தாம்; ஐந்தாவது இல்லை.

மரியாதைச் சொற்கள்

அவர்கள் தேசபக்தர் வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஈ. வெ. இராமசாமி நாயக்கர், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு ஆவர். இவர்கள் நால்வருக்கும் நாயுடு, நாயக்கர், முதலியார், பிள்ளை என்றே பெயர். அக்காலத்தில் பெயரைக் குறிப்பிடாமல் பட்டத்தைக் குறிப்பிட்டு அழைப்பதே மரியாதையாகக் கருதப்பெற்று வந்தது. இக்காலத்தில் இத்தகைய பட்டங்கள் அவ்வளவுக்கவ்வளவு வெறுக்கப் பெற்று வருகின்றன.

திசை

இந்நால்வரும் சாதியால் வெவ்வேறு கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, பிறந்த ஊர்களும், வளர்ந்த வாழ்ந்த விடங்களும் வெவ்வேறு ஆகும். சொல்ல வேண்டுமானால் பிள்ளை தெற்கு, நாயக்கர் மேற்கு. நாயுடு கிழக்கு, முதலியார் வடக்கு என்று