பக்கம்:எனது நண்பர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  73

சொல்லலாம் என்றாலும் பொதுத் தொண்டு செய்வதில் இந்நால்வரும் ஒருமைப்பட்டவர்கள் ஆவர்.

பயன் படுத்தல்

இந் நால்வரும் முதன் முதலில் தங்கள் பொதுநலத் தொண்டுகளை காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தே தொடங்கினார்கள். அக் காலத்தில் இவர்கள் நால்வரும் பிராமணர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும் பத்திரிகையின் பலமும் பிராமணர்களின் கையிலேயே இருந்ததால், அவர்களும் இந்நால்வரை மட்டுமே விளம்பரம் செய்து, தங்களின் ஆதிக்கத்திற்குப் பயன்படுத்தி வந்தார்கள்.

ஒத்த உள்ளம்

காலம் செல்லச் செல்ல இந் நால்வரும் உண்மையை. உணர்ந்தார்கள். காலப்போக்கில் இந் நால்வரும் காங்கிரசை வெறுத்து வந்தார்கள். கடைசியாக இந் நால்வருமே காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார்கள். இதுதான் ஒத்த உள்ளம் என்பது!

பொதுத் தொண்டு

பிள்ளை காங்கிரசை விட்டு வெளியேறித் தமிழ்த், தொண்டு செய்தார். நாயக்கர் காங்கிரசைவிட்டு வெளியேறி சமூக சீர்திருத்தத் தொண்டுகளைச் செய்தார். முதலியார் காங்கிரசைவிட்டு வெளியேறித் தொழிலாளர்களுக்குத் தொண்டு செய்தார். நாயுடு காங்கிரசை விட்டு: வெளியே இந்து மகா சபைக்குத் தொண்டு செய்தார்.

பட்டம்

பிள்ளைக்குத் தேசபக்தர் பட்டம் கிடைத்தது. நாயக்கருக்கு வைக்கம் வீரர் பட்டம் கிடைத்தது. நாயுடுவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/74&oldid=986132" இலிருந்து மீள்விக்கப்பட்டது