பக்கம்:எனது நண்பர்கள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74  எனது நண்பர்கள்

டாக்டர் பட்டம் கிடைத்தது. முதலியார்க்குத் தமிழ்த் தென்றல் பட்டம் கிடைத்தது.

ஆசிரியர்

நாயுடு, நாயக்கர், முதலியார் மூவரும் பத்திரிகாசிரியர்களாக விளங்கினார்கள். பிள்ளை நூலாசிரியராக விளங்கினார்.

ரசம்

பிள்ளையிடத்தில் சோக ரசமும், நாயக்கரிடத்தில் கார ரசமும், முதலியாரிடத்தில் சமரசமும், நாயுடுவிடத்தில் மின்சார ரசமும் குடிகொண்டிருந்தன. -

வாழ்க்கை

பொது வாழ்க்கையை, வியாபார விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டவர் நாயுடு. பொது வாழ்க்கையினால் தமது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளாமலும், அழித்துக் கொள்ளாமலும் இருப்பவர் முதலியார். பொது வாழ்க்கையில் தன் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர் நாயக்கர். பொது வாழ்க்கையால் தன் வாழ்க்கையை அடியோடு அழித்துக் கொண்டவர் பிள்ளை.

ஒளி

இந்நால்வரும் காங்கிரசில் இருக்கும்போது மின்மினிப்பூச்சி ஒளியையும், வெளியேறிய பிறகு மின்சார ஒளி விளக்கு ஒளியையும் பெற்றவர்கள்.

குறை

இறந்த தமது நண்பர் பிள்ளையைப்பற்றி உயிரோடிருக்கும் நண்பர்கள் மூவரும் கவலைப்பட்டதாகவோ, அவர் குடும்பத்தைக் கவனித்ததாகவோ தெரியவில்லை. சொல்ல வேண்டுமானால், அவரை மறந்தே போனார்கள் எனவும் கூறலாம். இன்னும் கூறவேண்டுமானால்