பக்கம்:எனது நண்பர்கள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  75
 

பிள்ளை அவர்களைப் பற்றிய இன்றைய தமிழ் நாட்டு விழிப்பு உணர்ச்சி அவர்களுக்கு வியப்பை அளிக்கும் என்றுகூட கூறலாம். இவர்களே முயன்றிருந்தால் கோவில்பட்டியில் ஒரு கோயிலும், குடும்பத்திற்கு சிறிது கூழும் கிடைத்திருக்கும்.

சிறை

பொது வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டு செய்ததின் பொருட்டு இந்நால்வரும் பலமுறை சிறை சென்றவர்கள். சிறையில் களைத்தவர் முதலியார். சிறையில் துன்புற்றவர் பிள்ளை. சிறைக்கு மகிழ்ந்தவர் நாயக்கர். சிறையில் செல்வாக்குப் பெற்றவர் நாயுடு.

பேச்சு

பிள்ளையின் பேச்சில் நாட்டுப் பற்றுச் சொட்டும். பெரியாரின் பேச்சில் உணர்ச்சி ஒளி தோன்றும். நாயுடுவின் பேச்சில் அரசியல் கலை மிளிரும். முதலியாரின் பேச்சில் தமிழ் மணங் கமழும்.

வழக்கம்

அறிவாளியின் வாழுங் காலத்தில் அவர்களை அறியாது வாழ்ந்து, மாண்டபிறகு மணிமண்டபங் கட்டுவது தமிழ் நாட்டின் இடைக்கால வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. மாண்டவர்களை மறந்து உயிரோடு இருப்பவர்களுக்கு விழாக் கொண்டாடுவது இன்றைய வழக்கமாக இருந்து வருகிறது. இருந்த போதும், இறந்த போதும் அறிஞர்களைப் போற்றி வாழ்வது பண்டைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இதுவே சிறப்பளிப்பதாக இருக்கும்.

40 ஆண்டுகள்

இந் நால்வருமே 60 ஆண்டுகளை கடந்தவர்கள்.40 ஆண்டுகளாக நற்றொண்டு செய்தவர்கள். இன்னும்