பக்கம்:எனது நண்பர்கள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76  எனது நண்பர்கள்
 

சில ஆண்டுகளில் மறைந்த நண்பரைத் தேடிச்செல்லுங் காலத்தை, இருக்கும் மூவரும் தேடிக் கொண்டிருப்பவர்கள்.

பெறும்பேறு

இந்நால்வரைத் தமிழ்நாடு பெற்றது. அதனால் ஒரு பெரும்பேற்றைப் பெற்றது. நாட்டு அறிவு, அரசியல் அறிவு, இன அறிவு, மொழி அறிவு ஆகிய நான்கையும் தமிழ் நாட்டிற்கு இந்நால்வரும் தனித்தனியே தந்த, செல்வங்களாகும்.

எதிர்காலம்

தமிழ்நாடு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நான்கு இளைஞர்களையே பெற்றது. இன்று நாற்பது. இளைஞர்களைப் பெற்றிருக்கிறது. எதிர் காலத்தில் நானூறு இளைஞர்களையும் பின் நாலாயிரம் இளைஞர்களையும் பெறும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. வாழ்க நால்வர்.

வாழ்க தமிழ் நாடு.

—தமிழர்நாடு, 7-12-1947