பக்கம்:எனது நண்பர்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
78  எனது நண்பர்கள்
 

முதலாளி; சிறந்த அறிவாளி; சிருக்கமான எழுத்தாளி’ அழுத்தமான பேச்சாளி; வாரி வழங்கும் கொடையாளி.

ஆறு அடி உயரம்: 180 பவுண்டு நிறை; கருத்த நிறம்; பளபளப்பான மேனி; எளிமையான நடை; பரந்த மார்பு; திரண்ட தோள்கள்; நீண்ட கைகள்; அடர்ந்த மயிர்; விரிந்த நெற்றி; அகன்ற கண்கள்; கூர்மையான பார்வை-இவை அத்தனையும் சேர்ந்து ஒருங்கே கண்டால், அது செளந்தர பாண்டியர் என்பது பொருள்.

ஒரு குடும்பத்தின் தலைவனாக, உறவினர் பலரின் பாதுகாவலராக, ஏழைகள் பலருக்கு ஆதரவாளராக, பயிர்த் தொழிலாளியாக, தோட்ட முதலாளியாக, வணிகராக, அரசியல் அறிஞராக, நீதிக்கட்சி உறுப்பினராக, சுயமரியாதை இயக்கத் தலைவராக, பகுத்தறிவுவாதியாக, ஜில்லா போர்டு தலைவராக, சென்னைச் சட்டசபை உறுப்பினராக, பெருங்கொடையாளியாக மட்டுமல்ல, ஒரு உயர்ந்த பேச்சாளியாகவும் வாழ்ந்து மறைந்தவர் நமது செளந்திர பாண்டியனார். மறைந்த ஆண்டு 1953. வாழ்ந்த ஆண்டுகள் 60.

தலைமைப் பேருரை

அன்று வரை-வரலாறு காணாத அளவில், முதலாவது சுயமரியாதை மாநாடு ஒன்று செங்கற்பட்டு நகரில் நடைபெற்றது. பனகல் அரசர் முதல் பல அமைச்சர்களும் பங்கு பெற்ற மாநாடு—அது. மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் சென்ற ஆண்டு அரசாங்கத் தலைமைவழக்குரைஞர். திரு.மோகன்குமாரமங்கலத்தின் தந்தையும், இன்றைய இந்திய நாட்டுத் தலைமை தளபதி திரு. குமாரமங்கலத்தின் தந்தையும் ஆகிய சேலம் குமாரமங்கலம் ஜமீன்தார் திரு. டாக்டர் சுப்பராயன் ஆவார். நாடு முழுதுமிருந்து பங்கு பெற்ற தோழர்கள் ஏறத்தாழ இருபதினாயிரம் பேர்கள். செங்கல்பட்டுப் புகைவண்டி