பக்கம்:எனது நண்பர்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.கி. ஆ. பெ. விசுவநாதம்  81
 
உண்மை நட்பு

ஒரு சமயம் சர். பி. டி. இராஜன் இல்லத்தில் பெரியாரும், நானும், பாண்டியனும், ராஜனும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சென்னையில் மேயராகவிருந்த இராவ் சாகிப் திரு. சிவராஜ் பற்றி பெரியார் ராஜனிடம் குறை கூறினார். அவரும் பெரியாருடன் இணைந்து கூறினார். உடனே திரு. பாண்டியர் விரைந்து எழுந்து உரக்கக் கூறியது இது; “நாம் சிவராஜின் உண்மையான நண்பர்களல்ல. நாம் உண்மையான நண்பர்களாக இருந்தால், அவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றிப் பேசியிருக்க மாட்டோம். அவரை வரவழைத்து அவரது எதிரில்தான் பேசுவோம். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.

இவ்வாறு கூறி, பாண்டியர் அவ்விடத்தை விட்டு அகன்றது கண்டு பேரதிர்ச்சியடைந்தேன். அவரது முகத்தில் ‘கோபக் கனலை’ கண்டது எனக்கு அதுவே முதல் தடவை. எவரும் எதுவும், பேசவில்லை. சில நிமிடங்கள் வரை. பின்னர் திரு. இராஜன் சமாதானம் கூறி, அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார். அவர் சமாதானமடைந்து என அருகில் அமர்ந்தாலும், அவர் விட்ட மூச்சு ஊது உலை போன்று அனல் இருந்தது. அன்றுதான் நான் நட்பின் தன்மை என்றால் என்ன என்ற முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

மற்றொரு சமயம் தோட்டத்தில் ஒரு தொழிலாளி பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு வழக்கும், சூதாடியதாக ஒரு வழக்கும், குடித்திருந்து வேலைக்கு வராதிருந்ததாக ஒரு வழக்கும், வாழைத் தாரை திருடிவிட்டதாக ஒரு வழக்கும் பட்டிவீரன் பட்டிக்கு வந்தன. நான் அப்போது அங்கு இருந்தேன். பாண்டியனார் விசாரிக்கத் தொடங்கினார். என்ன நடக்குமோ என எல்லோரும் அச்சமும் திகிலும் அடைந்-

எ.ந.–6