பக்கம்:எனது நண்பர்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.கி. ஆ. பெ. விசுவநாதம்  83
 

ஆத்திரப்பட்டு அவனை அடிக்கத் தன் வலது காலை மடக்கி ஓங்கினார். நான் தடுத்திராவிட்டால் அந்த வேலையாளின் பற்கள் உதிர்ந்திருக்கும். ஏனென்றால் பாண்டியனது வலது கால் எதிரிலுள்ளவனுடைய வலது கன்னத்தைத் தாக்கும் வலிமை படைத்தது. இக்கலையை அவரிடமின்றி நான் வேறு எவரிடமும் கண்டதில்லை.

வேறொரு சமயம் இதற்கு விளக்கம் கேட்டதற்கு ஒருவனுக்கு, குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும் சூழ்நிலையாலும்நேரிடுவன. ‘பொய் பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடையே அயோக்கியத்தனத்தினாலேயே நேரிடுவதும் என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் அவர் கூறினார். அன்றிலிருந்துதான் நானும் பொய் பேசுகிறவர்களை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்.

வாரி வழங்கு வள்ளல்

இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லையென்னாது வழங்கிய வள்ளல் பாண்டியர். குடும்பச் செலவுக்கு எடுத்து வந்த பணத்தையும் கொடை கொடுத்து வந்தவர் பாண்டியர். வாட்டமடைந்த முகத்தைக் கண்டால் தோட்டத்திற்குக் கூலிக்காக அனுப்பவிருக்கும் தொகையும் கொடுத்துவிடுவார்.

அன்னையின் ஆனை

வருமானத்திற்கு மீறிய கொடைத்தன்மை அவரிடம் இருந்ததால் பண்ணைக்குச் சிறிது கடன் வந்தது. அதைப் போக்க ஒரு புதிய தொழிலைத் தொடங்க எண்ணினார். அது திராட்சைப் பழங்களிலிருந்து இரசம் இறக்கி பலநாள் கெடாமல் வைத்திருப்பது. அதற்கு வேண்டிய அறிஞர்களையெல்லாம் வரவழைத்து, பெருஞ் செலவில் ஆராய்ச்சியெல்லாம் செய்து முடித்துவிட்டார். அதற்கு வேண்டிய வெளி நாட்டுப் பொறிகள் எல்லாம்