பக்கம்:எனது நண்பர்கள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84  எனது நண்பர்கள்
 

வரவழைக்கப் பெற்று விட்டன. அவர் தயாரித்த திராட்சை ரசத்திற்கு மிக நல்ல பெயர். சுவைத்துப் பார்த்தவர்களெல்லாம் நற்சான்று வழங்கத் தொடங்கி விட்டனர். பாதிரிமார்கள் சிலர் பட்டி வீரன்பட்டி திராட்சை ரசம் தங்களின் பூசைக்கு ஏற்றது என முடிவு கட்டி அதை வாங்க முன்வந்து விட்டனர். பாண்டியரின் நண்பர்களெல்லாம் அவர் திரட்டப்போகும் பெருஞ் செல்வத்கைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருந்தனர். பகைவர்களெல்லாம் பொறாமைப் பட்டனர். அந்நிலையில் நான் பட்டிவீரன் பட்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிடும்போது பெரியம்மா என்னிடம், “தமிழ், திராட்சை ரசம் இறக்கும் வேலையை விட்டுவிடும்படி அண்ணனிடம் சொல்லு என்றார்கள். சொன்னேன். அவ்வளவுதான்; விரைந்து எழுந்து தாயிடம் போய், “அம்மா இதைவிட்டால் பெரும் பொருள் நட்டம் வருமே!” என்றார். அம்மா அவர்கள் வேறு எதுவும் கூறாமல், “இது நம் குடும்பத்தில் வேண்டாம்” என்றார்கள். அவ்வளவுதான், என்ஜின்கள் எங்கு போயிற்றோ? எஞ்சினியர்கள் போய்விட்டார்கள்.

மறுநாள் காலையில் நானும் பாண்டியரும் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். மணப்பாறைக்கு அருகில் வரும்போது, பாண்டியனின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணிர் வந்தது. ஏன் என வினவியபோது, அதைத் துடைத்துக் கொண்டு அவர் கூறியவை இவை:-

“எனக்கு அறிவு வந்த நாட்களாக நான் செய்யும் எந்தச் செயலையும் அம்மா வேண்டாம்” எனச் சொன்னதே இல்லை. நேற்றுத்தான் அவர்கள் முதல் தடவையாக வேண்டாம் என்று சொன்னார்கள். முன்னதாக அவர்களது கருத்தை அறியாமல் போனேன். அதை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது.”

வீர மகன்

இதைக் கேட்ட போதுதான் ‘ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்-