பக்கம்:எனது நண்பர்கள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.கி. ஆ. பெ. விசுவநாதம்  85
 

லுக்கே உண்டு’ என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன் பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது.

உள்ளத்தால் உயர்ந்தவர்

திரு. ஏ. எஸ். எஸ். எஸ். சங்கரபாண்டிய நாடார் காங்கிரஸ் கட்சியின் தலைவர். திரு. ஊ. பு. அ. செளந்திர பாண்டியனார் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர். இருவரும் மைத்துனர்கள். ஒரு சமயம் அவர் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறையில் அடைக்கப் பெற்றிருந்தபோது பாண்டியனும் நானும் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறிச் சலுகைகளைப் பெற அவரே மறுத்து விட்டது எனக்கு வியப்பையளித்தது. அன்று அவர்கள் இருவரும் அளவளாவிப் பேசிக் கொண்டதிலிருந்து, ‘நல்லவர்கள் உள்ளத்தில் கட்சிக் கடுப்பு இருப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ந்தேன்.

மாவீரர்

திரு. ஏ. எஸ். எஸ். எஸ் சங்கரபாண்டிய நாடார் முதலில் மைத்துனர், பிறகு தீனதயாளனுக்குப் பெண் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தபோது, சம்பந்தியும் ஆனார். திருமணம் விருதுநகரில்.

பதிவுத் திருமணம்; ரிஜிஸ்டிரார் மணப்பந்தலுக்கே வந்து நடத்தி வைத்தார். சாட்சிக் கையெழுத்து யாரைப் போடச் சொல்வது? என்ற சிக்கல் வந்தது. இது பெரும் பிரச்சினையாக வந்துவிடும்போல் தோன்றியது. இறுதியில் சம்பந்தி பெண்வீட்டார் சார்பில் கே. காமராஜ் கையெழுத்திடுவார்’ எனக் கூறினார். உடனே பாண்டியர் ‘மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கி. ஆ. பெ. விசுவநாதம் கையெழுத்திடுவார்’’ எனக் கூறினார். இருவரும் ஒப்ப, அதன்படி கையெழுத்-