பக்கம்:எனது நண்பர்கள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
86  எனது நண்பர்கள்
 

திட்டுத் திருமணம் இனிது முடிந்தது. இத் திருமணத்தைப் போல் விறுவிறுப்யும், ஆனால் அதே நேரத்தில் அமைதியும் கலந்த திருமணம் ஒன்றை நான் இன்னும் கண்டதில்லை.

அஞ்சா நெஞ்சம் படைத்தவர்

விருதுநகரில் திரு. வி. வி. இராமசாமி ஜில்லாபோர்டு தேர்தலுக்கு நின்றார். போட்டி மிகக் கடுமையாக இருந்தது. ஒரு நாள் திரு. பாண்டியர் தலைமையில் நானும்; திரு. வி. வி. ஆரும் பேசுவதாகப் பெரிய கூட்டம் நடக்கும் என அறிவிக்கப் பெற்றிருந்தது. கூட்டத்தை நடக்கவொட்டாமல் கலகம் செய்ய எதிர்க் கட்சியினர் திட்டமிட்டிருந்தது, எங்களுக்குத் தெரிய வந்தது. பட்டிவீரன்பட்டிக்குச் செய்தி சென்றது. அங்கிருந்து ஒரு பெரும் படையே திரண்டு வந்தது. கூட்டம் துவங்கியது. பாண்டியர் தலைமையில் என்ன நேருமோ? வென்ற அச்சம் சூழ்ந்திருந்தது. பாண்டியரது தலைமை உரையில் ஏழு சொற்கள் வெளிவந்தன. அவை:—

“காலித்தனம் நடந்தால் அது காலித் தனத்தாலேயே அடக்கப்படும்” என்பதே, அந்த நெருப்புப் பொறி. அக்கூட்டத்தில் நானும் வி. வி. ஆரும் மட்டுமே மூன்று மணிநேரம் பேசினோம். பின் கூட்டம் அமைதியாக நடந்தது. மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று.

மட்டப்பாறை வெங்கட்ராமைய்யர், நிலக்கோட்டைத் தொகுதியில் பாண்டியனுக்குப் போட்டியாக தேர்தலில் நின்றார். நாங்களெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தோம். ஒரு நாள் சத்தியமூர்த்தி ஐயா மட்டப் பாறைக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வந்திருந்தார். பேசிவிட்டு அவர் ஊர் திரும்பியபோது கார் ஒரு திருப்பத்தில் திரும்பியது. அப்போது மலைக் குன்றிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து காரின்மேல் பாய்ந்தது. ஒரு நொடியில் கார் தப்பியது.