பக்கம்:எனது நண்பர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88  எனது நண்பர்கள்


சென்னை மாகாண ஐஸ்டிஸ் கட்சியின் பொதுக் காரியதரிசி பதவியிலிருந்து நான் விலகி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்டதும், பாண்டியன் ஆச்சரியப்பட்டும், ஆத்திரப்பட்டும், திருச்சிக்கு வந்து காரணம் கேட்டார். விளக்கினேன். மகிழ்ச்சியடைந்தார்.

அரசியல் வாழ்வு

கட்சியில் கருத்துவேற்றுமை ஏற்பட்டது. அதன் பிறகு ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடக் கழகமாக மாற்றுகிற மகாநாடு சேலத்தில் 1946இல் நடந்தது. அம்மகாநாட்டை நான் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றி விலகினேன். பாண்டியன் தன் கருத்தை விளக்கமாகப் பேசி விலக்கினார்.

அடுத்து, வி. வி. ஆர். பொன்னம்பலனார், ஜி. ஜி. நெட்டோ, சேலம் கணேச சங்கர் முதலியோரும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சியினரும் விலகினார்கள். எங்கள் அரசியல், வாழ்வு அதோடு முடிந்தது.

குடும்பத்தில் ஒருவன்

பாண்டியன் எனக்கு அண்ணன். ரெங்கசாமி எனக்குத் தம்பி. தன் பண்ணையாட்களில் தான் பலமுறை கண்டித்தும் திருந்தாதவர்களை ரெங்கசாமி, அண்ணனிடம் விசாரணைக்குக் கொண்டுவந்து விடுவார். ஆனால் அவரும் எதிர் நின்று பேச அஞ்சுவார். நான் இடையில் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்து வந்தவன். அவர்கள் குடும்பத்தினர் செய்திகள் கூட அவர்களுக்குள்ள அச்சத்தின் காரணமாக பாண்டியருடைய காதுக்கு என் மூலமாகவே போய்ச் சேருவதுண்டு. அத்தகைய இணைப்பு அவர்களின் மறைவோடு பெரும்பாகம் மறைந்து, எஞ்சியுள்ள சிறு பாகமும், ‘சித்தப்பா’ என்று ஓயாது அழைக்கும் மகள் விஜயாம்பிகையின் மறைவோடு போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/89&oldid=986336" இலிருந்து மீள்விக்கப்பட்டது