பக்கம்:எனது நண்பர்கள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.கி. ஆ. பெ. விசுவநாதம்  89
 
அனைத்தையும் இழந்தேன்

பாண்டியன் மறைந்தபோது அவர் பற்றிய செய்தியை திராவிட நாடு பத்திரிகைக்கு எழுதி அனுப்புமாறு நண்பர் சி. என். அண்ணாத்துரை கேட்டிருந்தார். நான் அனுப்பிய செய்தி இது:—

“தமிழகம்ஒரு அறிஞனை இழந்தது. மதுரை தன் தலைவனை இழந்தது. சர். பி. டி. ராஜன் தன் வலது கையை இழந்தார். சுயமரியாதை இயக்கம் தன் துணைத்தலைவரை இழந்தது. தோழர்கள் நண்பரை இழந்தனர். மக்கள் தந்தையை இழந்தனர். தம்பி ரங்கசாமி தன் தமையனை இழந்தார். என் அண்ணியார் தம் மாங்கல்யத்தை இழந்தார். நானோ அனைத்தையும் இழந்தேன்” என்பதே.

அவரது இருப்பிடத்தை நிரப்ப இதுவரை யாரும் தோன்றவில்லை. ஆகவே, அவரது இழப்பு தமிழகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.