பக்கம்:எனது நண்பர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திரு. ஓ. பி. இராமசாமி ரெட்டியார்

மாந்தூர் திரு ஒ. பி. இராமசாமி ரெட்டியார் அவர்களைத் தமிழகம் நன்கறியும். ஓமாந்துரிலுள்ள ஒரு பெருங் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குத் தம்பிகள் இருவர் உண்டு. இவருக்குக் குழந்தைகள் இல்லை. இளமைப் பருவத்திலேயே மனைவியை இழந்திருந்தும் மறுமணம் செய்து கொள்ளவும் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இல்லறத்தில் வாழ்ந்த ஒரு துறவி என்றே சொல்லலாம்.

தமிழகத்துக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவர், காந்தியடிகளிடத்தும் அவரது கொள்கைகளிடத்தும் நீங்காத பற்றுடையவர். காந்தியடிகளின் வழியில் தவறாது நடந்து, அவரது நிழல்போலக் காட்சியளித்தவர் திரு ரெட்டியார் அவர்கள்.

அவர் வாழ்நாளில் பொய்யே பேசியதில்லை. உண்மை பேசுகிறவன் அரசியல் வாதியாகவும் ஆகலாம் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர். தவறு செய்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவரைக் கண்ணெதிரிலேயே கண்டித்துத் திருத்தும் பழக்கம் அவருக்குண்டு. பொய்யர்களை அடியோடு வெறுத்துவிடுவார். அநீதியை எதிர்க்காதவன் ஆண்மகன் அல்ல’ என்பது அவரது வாக்கு. பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டிருக்கும் அவரால், பிறர் செய்கின்ற தவறைச் சகிக்க முடிவ முடிவதில்லை. இதனால் அவரைச் சிலர் ‘முன்கோபி’ எனக் கூறுவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/91&oldid=986340" இலிருந்து மீள்விக்கப்பட்டது