பக்கம்:எனது நண்பர்கள்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.கி. ஆ. பெ. விசுவநாதம்  93
 

தனக்கு மற்றொரு சிற்றுண்டி கொண்டு வரச் சொன்னார். இரயில் நிலைய அதிகாரிகள் அருகில் இருந்ததால், வண்டி புறப்பட்டு விடாது என்ற தைரியத்தினால், அவர் அருகிலேயே நின்றேன். “நீங்கள் போய்ச் சிற்றுண்டி அருந்துங்கள். சென்னைக்கு வரும் போதெல்லாம் ஓய்வு நேரங்களில் என்னை வந்து சந்திக்கலாம்” என்று சொல்லியனுப்பிவிட்டு, வண்டியில் ஏறிக்கொண்டார். இந்த முதற் சந்திப்பு என்னை வியப்படையச் செய்தது.

நல்லவர்கள்

அவர் முதல் மைச்சராக இருக்கும் பொழுது நான் இருமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.ஒரு முறை சந்தித்த பொழுது, ‘உங்களைப் போன்று நல்லவர்கள் உங்கள் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்பார். “என்னை நல்ல்வன் என்று நீங்கள் அறிந்து கொண்டது எப்படி?” என்று கேட்டேன். உங்கள் தமிழர் நாடு, பத்திரிக்கையில் நான் முதலமைச்சரானது பற்றி நீங்கள் எழுதிய தலையங்கத்தைப் பல நண்பர்கள் என்னிடம் கொண்டு வந்து காட்டினார்கள். அதில் நீங்கள் என்னைப் பற்றி எழுதியிருந்ததைவிட உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளித்தெழுதியிருந்த தங்கள் குணமே போற்றற்குரியதாயிருந்தது. தங்கள் மேடைப் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கவனித்து வருகிறேன்” என்று கூறினார். அப்படி மதிப்பளிக்கிறவர்கள் என்னிலும் பலர் நீதிக்கட்சியிலிருக்கிறார்களென்று ஒரு பட்டியலையே போட்டுக் கொடுத்தேன். அதைக் கண்டு “அப்படியானால் அவர்களிலும் சிலரைக் கண்டு நான் பேசவேண்டு”மென்று தெரிவித்துவிட்டு, “வந்த வேலை என்ன?” என்று கேட்டார். “உங்களுக்கு வணக்கம் கூற வந்த வேலையைத் தவிர வேறு வேலையில்லை” என்று கூறி வெளியேறினேன்.

பற்றுதல்

காங்கிரஸ் கட்சியில் சட்டசபை உறுப்பினராக இருந்த என்பழைய நண்பரொருவரை நான் சந்திக்க