பக்கம்:எனது நண்பர்கள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94  எனது நண்பர்கள்
 

நேர்ந்தபோது, அவர் முதலமைச்சர் தம்மிடம் “விகவநாதம் ஒரு வேடிக்கையான மனிதர். அவர் என்னிடம் மூன்று முறை வந்ததும் எதுவுமே கேளாமற் போயிருக்கிறார்” என்று கூறியதாகச் சொன்னார். இச்செய்தி என் உள்ளத்தில் அவர்மீது அதிகப் பற்றுக் கொள்ளும் படி செய்துவிட்டது.

துணிச்சல்

முதலமைச்சராய் இருந்தும், அவர் திருச்சிராப்பள்ளியைக் கடந்து செல்லுகின்ற ஒரு நாளில் என் இல்லத்திற்கு வந்துபோனது, எதற்குமஞ்சாத அவரது துணிச்சலையே காட்டிற்று; வியப்படைந்தேன்.

பரிமாறுதல்

நாங்களிருவரும் அரசியலைவிட்டு, வெளியேறுங்காலம் வந்துவிட்டது. அதனால் மாறுபட்ட கட்சியினராகிய நாங்களிருவரும் மிக நெருக்கமாக ஒன்றுபட நேர்ந்து விட்டது. அடிக்கடி சந்திப்போம். அப்பொழுதெல்லாம் நாங்கள் அரசியலில் பட்ட துன்பங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்வோம்.

ஓய்வு

திரு ரெட்டியார் அவர்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற காலத்தில், இராமலிங்க அடிகளாரிடத்தும் அவரது சன்மார்க்க நெறியினிடத்தும் அதிகப்பற்றுக் கொண்டும், பணிபுரிந்து கொண்டும் வாழ்ந்தார்கள். சென்னையிலுள்ள இராமகிருஷ்ண மிஷினின் தலைமைப் பொறுப்பேற்றதும், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் அமைத்ததும் இதை மெய்ப்பிக்கும். இத்துறையில் நாங்களிருவருமே மிக நெருங்கியிருந்து பணிபுரிந்தோம்.