பக்கம்:எனது நண்பர்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர்
சர். ஏ. இராமசாமி முதலியார்

ல்வியிலும் அறிவிலும் செல்வத்திலும் தொழிலிலும் தொண்டிலும் உயர்ந்த ஒரு பெரும் குடும்பத்தில் பிறந்து, உள்ளத்தில் உயர்ந்து வாழ்ந்த ஒரு பேரறிஞர் சர். ஆற்காட்டு இராமசாமி முதலியார்.

வழக்கறிஞர், சட்டசபை உறுப்பினர், பார்லிமெண்ட் செக்ரட்டரி, பத்திரிகையாசிரியர், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர், வார் கவுன்சில் மெம்பர், வட்ட மேஜை மகாநாட்டுப் பிரதிநிதி, பல்கலைக்கழகத் துணைவேந்தர், சமஸ்தான திவான், விஞ்ஞானத்தொழில் ஆராய்ச்சிக் கழகத் தலைவர், இந்திய ஸ்டீம் கப்பல் கம்பெனித் தலைவர், சென்னை நகராட்சித் தலைவர், இந்தியப் பேரரசின் வர்த்தக அமைச்சம் ஆகிய எத்தனையோ பதவிகள் அவரை அடைந்து பெருமை பெற்றன.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும், நமது ஆசிய கண்டத்திலும் உள்ள பல நாடுகளுக்குப் பலமுறை சென்று வந்தவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர் செல்லாத நாடுகள் உலகில் எதுவுமே இல்லை எனக்கூறி விடலாம்.

அரசு அவருக்கு வழங்கிய பட்டங்கள்: வழக்கறிஞர், டாக்டர், சர், திவான், ராஜமந்திர சிந்தாமணி, பத்ம-