பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


பக்கத் தட்டிக்கருகே அவருக்காக ஒரு கான்வாஸ் சேர் போடப் படும். சுவாமிகள் அதில் படுத்துக்கொண்டு கடைசிவரை நாடகத்தைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். நடிகர் யாராவது பாடம் உளறில்ை சுவாமிகள் அவர்களை எளிதில் விடமாட்டார். காட்சி முடிந்தவுடன் உளறிய நடிகர் சுவாமிகள் இருக்கும் பக்கம் போகவே பயப்படுவார். நடிகரைக் கூப்பிட்டு அவர் பாடம் உளறியதைச் சைகையாலேயே சுட்டிக் காட்டுவார். சில சமயங்களில் அடிக்கவும் முயலுவார். கை கால்கள் சரியாக விளங் காத நிலையில் இருந்ததால் நடிகர்கள் அடிவிழாமல் தப்பித்துக் கொள்ளுவார்கள். எல்லா நாடகங்களும் சுவாமிகளுக்கு மனப் பாடம். நாடகப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் வழக்கமேயில்லை.

உளறலும் பாராட்டும்

ஒரு நாள் பாதுகா பட்டாபிஷேகம் நாடகம் நடந்தது. சின்னண்ணா டி. கே. முத்துசாமி பரதனாக நடித்தார். கேகய நாட்டில் பரதன் தீயகனாக் கண்டு, அதைத் தம்பி சத்துருக்கனனிடம் சொல்லும் காட்சியில், ‘தம்பி சத்துருக்கனா’ என்பதற்குப் பதிலாகத் “தம்பி லட்சுமணா” என்று சொல்லிவிட்டார். சபையோர் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

இலங்காதகனம், கலோசனசதி ஆகிய நாடகங்களில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுகவும் நடிப்பது வழக்கம். பாதுகா பட்டாபிஷேகத்திலும் எனக்கு லட்சுமணன் வேடந்தான் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னண்ணா பரதனாக நிற்பதை மறந்து, ராமர் வேடம் போட்டுப் பேசிய பழக்கத்தில் “தம்பி லட்சுமணா” என்று தவறுதலாகச் சொல்லி விட்டார். ஆனால் அந்தத் தவறை உடனே புரிந்து கொண்டு,

“தம்பி சத்ருக்கனா! எப்போதும் அண்ணன் ராமச்சந்திரனையும், தம்பி லட்சுமணனையும் என் மனம் நினைத்துக் கொண்டே யிருப்பதால் வாய் தவறி உன்னையும் லட்சுமணாவென்றே அழைத்து விட்டேன்” என்று பேசிச்சமாளித்தார். அண்ணாவுக்கு அப்போது வயது பன்னிரெண்டு இந்த இளம் வயதில் இவ்வளவு சாதுரியமாகச் சமாளித்ததற்காகச் சபையோர் அனைவரும்