பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


வண்டிப்பாளையம் திரும்புவோம். இப்படியே தொடர்ந்து நடை பெற்று வந்தது.

ஒருநாள் எங்கள் தந்தையாருக்கும், மானேஜர் நிலையி லிருந்த காமேஸ்வர ஐயருக்கும் பெரிய சச்சரவு ஏற்பட்டது. காமேஸ்வர ஐயர் ஏதோ தவருகப் பேச, தந்தையார்கொட்டகை யில் போட்டிருந்த பந்தல் காலைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடிக்கப்போக, ஒரே குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஐயரை எப்படியும் அடித்தே தீருவது என்று அப்பாவும் முத்துக்கன்னி மேஸ்திரியும் பலமுறை முயன்றார்கள்.

சின்னையா யிள்ளை வருகை

காமேஸ்வர ஐயர் நடிகர்களிடமும், ஏனைய தொழிலாளர் களிடமும் நடந்து கொண்டவிதம் தந்தையாருக்குப் பிடிக்க வில்லை.

உரிமையாளர்களும் இதில் போதிய கவனம் செலுத்த வில்லை. கம்பெனியின் முக்கிய பங்குதாரரான சின்னையாபிள்ளை சென்னையிலிருந்தது போனவர் திரும்பி வரவே இல்லை, காமேஸ் வர ஐயரின் நடத்தையைப் பற்றியும் அவர் தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் தந்தையார் மதுரையி லிருந்த சின்னையாபிள்ளைக்குக் கடிதம் எழுதினார். கடிதத்திற்குப் பதில் இல்லாததால் ஒரு நாள் மதுரைக்கே நேரில் சென்று விவரங்களே எடுத்துரைத்தார். தந்தையார் மதுரைக்குச் சென் நிருப்பதை அறிந்ததுமே காமேஸ்வர ஐயர் கம்பெனியிலிருந்து விலகிவிட்டார். சகல விவரங்களையும் தந்தையாரின் மூலம் அறிந்த சின்னையாபிள்ளை சில நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து கம்பெனியின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்டார்.

திருப்பாதிரிப்புலியூரில் வசூல் இல்லாததால் மீண்டும் வேலூருக்கு முகாம் மாற்றப்பட்டது. வேலூரிலும் இம்முறை வசூலாகவில்லை. காஞ்சிபுரம் போவதென்று முடிவு செய்தார்கள். காஞ்சிபுரம் வந்தோம். கருடசேவைப் பெருவிழா, நகரில் பிர மாதமாக நடக்கும் சமயம். ஆடிசன்பேட்டை கொட்டகையில் நாடகம். வெளியே ஊரெங்கும் ஒரே ஜனத்திரள். நாடகத்திற்கு மட்டும் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. சின்னையா