பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


விளக்குவது கடினம். அவதானத்தின் இலக்கணத்தைப் பற்றிச் சரவணப்பெருமாள் கவிராயர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.அந்தப் பாடலின் ஒரு பகுதியை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

“மாறாமல் வாய்வேலு

மயிலுமென

வேசொல்ல, வாசகம்

கைகள் எழுத,

வருகணக் கொருபுறம்

தீர, மற்றொரு

புறம் வரைந்திடும்

இலக்க மாற”

வளைத் திரைக் குட்சிறிது

கல்லனி

வகுக்கின்ற வன்கணக்

கினிது பகர,

மருவு சொக் கட்டானும

விளையாட,

மறைவாக வைத்த

சதுரங்க மாட ....’

இப்படியே இன்னும் பலவகையான அற்புதச் செயல்களையெல் லாம் நினைவாற்றலோடு செய்ய வேண்டும். அவதானம் செய்வோர் சபைக்குத் தக்கவாறு தம் செயல்களை மாற்றிக் கொள்வதும் உண்டு. இது ஒர் அபூர்வமான கலை, காகர்கோவில் ஆறுமுகம்பிள்ளை தசாவதானம் செய்வதை நான் இருமுறைபார்த் திருக்கிறேன். அபாரமான திறமை, நினைவாற்றல் இவற்றோடு கடவுளின் திருவருளும் இருந்தால்தான் இந்தக் கலையில் வெற்றி பெற முடியும் என்பது என் நம்பிக்கை.

சிந்தாதிரிப்பேட்டையில் கம்பெனி வீட்டோடு இருந்தது எங்கள் தாயாருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் வைதீக மனப்பான்மை உள்ளவர்கள். வேறு தனி வீட்டுக்குப் போக வேண்டுமெனப் பிடிவாதம் செய்தார்கள். வேறு வழியின்றி ஆனைக்கவுணி யருகில் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் ஒரு தனிவீடு