பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


அப்பாவுக்கு நோய் அதிகப்பட்டது

திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சில சிற்றுரர்களுக்குச் சென்று சிதம்பரம் வந்து சேர்ந்தோம். அப்போது அண்ணாமலைப் பல்கலை கழகமும், அண்ணாமலை நகரும் இல்லாத காலம். சிதம்பரத்தில் ஒடுகள் வேய்ந்த ஒருகொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. நல்ல வசூலாயிற்று. தம்பி பகவதி, தொடக்கப் பள்ளியில், சேர்க்கப்பட்டான். காஞ்சீபுரத்தில் தந்தையாருக்குக் காலில் விஷக்கல் குத்தி நோய் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டேனல்லவா? அந்த நோய் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியது. அடிக்கடி உடல் நலமில்லாமல் சிரமப்பட்டார். திடீரென்று ஒருநாள் மயக்கம் வந்துவிட்டது. தமக்கு இறுதி நாள் நெருங்கிவிட்ட தென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் தோன்றி விட்டது. குடும்பத்தோடு, பிறந்த ஊருக்குப் போகவேண்டுமென முதலாளிகளிடம் பிடிவாதம் செய்தார். எங்களை மட்டும் விட்டுப் போகும்படி உரிமையாளர்கள் ஏதேதோ சொன்னார்கள். அப்பா ஒப்பவில்லை.

“தான் திடீரென்று இறந்துபோக நேரலாம். பிறந்த ஊரில் சுற்றத்தார் முன்னிலையில் இறக்க விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின் ஊருக்குப் போவதால் பிள்ளைகளையும் அவசியம் அழைத்துப் போகவேண்டும். ஒரு வாரத்தில் அவர்களை அனுப்பி விடுகிறேன். நான் சில மாதங்கள் தங்கியிருந்து உடல் நிலை சுகமடையுமானால் வருகிறேன்” என்று கூறினார். வேறு வழியின்றி முதலாளிகளும் இசைந்தார்கள். தூரப் பயணமாதலால் துணைக்காகக் கோட்டயம் திரு கோபாலபிள்ளையையும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் குடும்பத்துடன் பிறந்த ஊராகிய திருவனந்தபுரத்திற்குப் பயணமானோம்.

பிறந்த நகரம்

திருவனந்தபுரத்திற்குப் போகிறோம் என்பதில் எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி. நானும், என் தமையன்மார்கள் இருவரும் திருவனந்தபுரத்தில்தான் பிறந்தோம். சின்னஞ் சிறு வயதில் நான் தவழ்ந்து விளையாடிய இடம். திருவனந்தபுரத்தில் இப்போது இருக்கும் பெரிய ரயில் நிலையம் அப்போது இல்லை. கடற்புரத்திற்கு அருகில் ஒரு சின்ன ரயில் நிலையம் இருந்தது. அதில்