பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாட்டுக்கோட்டை நகரத்தில்

புதுக்கோட்டை அப்போது தனி சமஸ்தானமாக இருந்தது. பல கம்பெனிகள் புதுக்கோட்டைக்குப் போய் வசூல் இல்லாமல் சிரமப்பட்டதாக அறிந்தோம். பிரசித்தி பெற்ற நடிகராகிய மனமோகன அரங்கசாமி நாயுடுவின் நிருவாகத்தில் இருந்த ஆலந்துார் ஒரிஜினல் டிராமடிக் கம்பெனியார் புதுக்கோட்டையில் அதிகக் கஷ்டப்பட்டதாகவும், அதன்பிறகு யாரும் புதுக்கோட்டைக்கே போனதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். பல ஆண்டுகளாகப் புதுக்கோட்டையில் நாடகமே நடந்த தில்லையென்பதை அறிந்தபோது எங்களுக்கெல்லாம் அச்சமாக இருந்தது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு அந்த நாளில் லாரி வசதிகளெல்லாம் இல்லை. திருச்சி வழியாக ரயில்கூட இல்லாத காலம் அது. சாமான்களை இரட்டை மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்பிவிட்டு, நாங்கள் பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம்.

புதுக்கோட்டையில் முதல் நாடகம் தொடங்கியது. வசூல் சுமாராக இருந்தது. இரண்டாவது நாடகத்திலிருந்தது எதிர் பாராதபடி அமோகமாக வசூலாயிற்று. எங்களுக்கு ஒரே குதுரகலம். புதுகோட்டை பிரஹதாம்பாள் தியேட்டரில் வேறு எந்தக் கம்பெனிக்கும் இப்படி வசூலானதில்லையென்று எல்லோரும் அதிசயப்பட்டார்கள். நாடகம் பார்க்க வந்த ரசிகர்களில், நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் அதிகமாக இருந்தார்கள்.

சின்னையாபிள்ளையின் மனமாற்றம்

நாலைந்து நாடகங்கள் நடந்ததும் கூடலூர் கொட்டகையில் அடகுவைக்கப்பட்டிருந்த சாமான்களை மீட்டு வர, சின்னையா பிள்ளை பணத்துடன் போனார்.நான்கு நாட்களில் திரும்பினார். அடகு வைக்கப்பட்டிருந்த தவணை நாட்கள் தீர்ந்துவிட்டதால்