பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


கொட்டகைகாரர் சாமான்களையெல்லாம் விற்று விட்டதாகவும், அவற்றைத் தன் தம்பியே வாங்கியிருப்பதாகவும், தம்பியிட மிருந்து தான் வாடகைக்கு வாங்கி வந்திருப்பதாகவும் கூறினார். மற்றப்பங்காளிகளை வஞ்சிக்கும் நோக்கமுடன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்திருப்பதாக ஊகித்தோம். இவற்றை எல்லோரும் நம்பும் விதத்தில் பத்திரங்களும் தயார் செய்து கொண்டு வந்திருந்தார்.

புதுகோட்டைக்கு வந்தபின் பெரியண்ணா டி. கே. சங்கரன் கம்பெனியில் கணக்குப்பிள்ளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பட்டார். அவருக்கு இருபத்தைந்து ரூபாய் சம்பளம் போடப் பெற்றது. சின்னையாபிள்ளை கூடலூருக்குப் போகும் போது வசூலாகும் பணத்தை நடிகர்களுக்கு கொடுக்கும் படியாகப் பெரியண்ணாவிடம் சொல்லிவிட்டுப் போனார். அதன்படியே கொடுக்கப்பட்டது. திரும்பி வந்ததும் பூராப் பணத்தையும் செலவு செய்து விட்டது பற்றிக் கடிந்து கொண்டார். எங்களைப் பற்றித் தாறுமாருகத் தப்பும் தவறும் பேசியதாக மற்றொரு பங்காளியான பழனியாபிள்ளை முலம் அறிந்து வருந்தினோம். பேச்சு வார்த்தை வளர்ந்தது. இறுதியாக அந்த ஊரோடு கம்பெனியை விட்டு விலகிக் கொள்வதாகத் தெரிவித்து விட்டு வந்தார் பெரியண்ணா.

பிறகு, சின்னயாபிள்ளை அம்மாவிடம் வந்து, தான் ஒன்றுமே தவருகச் சொல்லவில்லையென்றும், யாரோ வேண்டு மென்று கோள் மூட்டியிருக்கிறார்களென்றும் கூறினார். கம்பெனிக்கு நல்ல வசூலாகி வருவதால் பாவலர் கம்பெனியில் கொடுத்து வந்த இருநூற்றி ஐம்பது ரூபாய்கள் சம்பளம் போட்டுத் தாம் தருவதாகவும் அறிவித்தார். மீண்டும் சமரசம் ஏற்பட்டுக் கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டோம். எனக்கும் சின்னண்ணாவுக்கும் ரூ. 250 சம்பளம் போடப்பட்டது.

பி. யூ சின்னப்பா

புதுக்கோட்டையில் பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற நடிகராக விளங்கிய பி. யூ. சின்னப்பா சுவாமி கம்பெனியில் நடிகராக வந்து சேர்ந்தார். அவருடைய சாரீரம் கணிரென்றிருந்தது.