பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159


"ஒரும் அவதானம் ஒருநூறு செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனைச்-சீரிய
செந்தமிழ்ச் செல்வன, செய்குதம்பிப் பாவலனை
எந்தகாள் காண்பேன் இனி?"

இத்தகைய பெரும் புகழ்படைத்த முஸ்லீம் பெரியார், அன்று மேடையேறி, பாண்டியன் வேடத்தில் நின்ற என். எஸ். கிருஷ்ணனை வாழ்த்திப் பரிசளித்தார்.

“நம் நாஞ்சில்நாட்டு இளஞ்சிறுவன் என்.எஸ். கிருஷ்ணன் வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப் போகிறான். இவனுடைய புகழால் நம் நாஞ்சில்நாடு மட்டுமல்ல; தமிழ்நாடே பெருமையடையப் போகிறது.”

எனச் செய்குதம்பிப் பாவலர்தம் செந்தமிழ்த் திருவாயால் வாழ்த்தியது என் நினைவில் இருக்கிறது. அப்பெரியாரது தீர்க்க தரிசனத்தை எண்ணி, இப்போதும் நான் பெருமையடைகிறேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் எத்தனையோ முறை இதைப் பெருமையோடு சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

யார் உரிமையாளர்?

கம்பெனி திருநெல்வேலிக்கு வந்தது. கொல்லத்தில் நாங்கள் விலகியபின் சின்னையாபிள்ளை மிகவும் சிரமப்பட்டதாக அறிந்தோம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். எங்கள் கம்பெனி மனோரமா தியேட்டரிலும், சின்னையாபிள்ளை கம்பெனி கணபதி விலாஸ் தியேட்டரிலும் நடைபெற்றது. பல நடிகர்கள் போய் விட்டதால் அவருடைய கம்பெனி தள்ளாடிக் கொண்டிருந்தது.

சகோதரர்கள் நாங்கள் நால்வரும் சிறுவர்களாய் இருந்ததால் மாமா செல்லம்பிள்ளை, தம் பெயரையும், சிற்றப்பா பெயரையும் உரிமையாளர் ஸ்தானத்தில் போட்டார். இதைப் பார்த்த சிற்றப்பா யாராவது ஒருவர் பெயர் இருந்தால் போதும்’ என்றார், உடனே மாமா, தம் பெயரை எடுத்து விட்டார். ‘டி. எஸ்.செல்லம்பிள்ளை உரிமையாளர்’ என்று சிற்றப்பா பேரே விளம்பரப் படுத்தப் பட்டது. இந்த நிலையில் நாங்கள் சொந்தக்