பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164


தாக்கியிருக்கிறார். ரத்தக்காயம். ஏற்பட்டதும் கலவரம் வலுத்து விட்டது. பிறகு சிற்றப்பா, தம் கையிலிருந்த நீண்ட கத்தியால், பலபேரைக் குத்தியிருக்கிறார். கலவரம் வலுத்துவிடவே பையன்களுக்கு ஆபத்து வரக்கூடுமென்று அஞ்சிக் கூட்டத்திலிருந்து மறைந்து விட்டார். கண்டகோடரியால் தாக்கியவரும் தலை மறைவாய் போய்விட்டார். இருவரையும் தேடிக் கொண்டு தான் கலவரக்காரர்கள் அரங்கிற்குள் வந்திருக்கிறார்கள். இத்தகைய எதிர்ப்பைக் கலவரக்காரர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. குத்தியவரைத் தேடிப் பார்த்துவிட்டு, வேறு எதுவும் செய்யத் தோன்றாது அவர்கள் திரும்பிச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

சமாதானம்

சுவாமிகளின் நண்பரும், பரதவர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான அலங்காரப்பரிசு என்பவர் கலவரச் செய்தியறிந்து கம்பெனி வீட்டுக்கு வந்தார். கலவரம் செய்தவர் களையும் சிற்றப்பாவையும் ஒன்றாக வைத்துப்பேசிச் சமரசம் செய்து வைத்தார். இரண்டாவது நாடகத்திற்குக் கலவரம் செய்தவர்களே வெளிவாயிலில் இருக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனார். கலவரம் செய்த ரெளடிகளே பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் கலவரம் நடக்குமா? அதன் பிறகு நாடகங்கள் அமைதியாக நடை பெற்றன. இவ்வளவு குழப்பத்திலும் போலீஸார் யாரும் தலையிடாதது எங்களுக்குப் பெரும்வியப்பாக இருந்தது. கலவரம் விளைவதற்குக் காரணமாயிருந்த மானேஜர் காமேஸ்வர ஐயர், வெளிவாயிலில் அடிதடி விழுந்ததுமே ஓடிப்போனவர் மறுநாள் தான் கம்பெனிவீட்டிற்கு வந்துசேர்ந்தார். தூத்துக்குடி நாடகங்கள் முடிந்து, சாத்துாருக்குப் புறப்பட்டோம்.

காசிப்பாண்டியனின் கலை ஆர்வம்

சாத்துரரில் எட்டையபுரம் இளையராஜா காசிப் பாண்டியன் தினமும் நாடகம் பார்க்க வந்தார். நடிகர்களுக்குப் பெரும் பரிசுகள் வழங்கினார். தம் புதல்வர்கள் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன்களைக் கழற்றி, எனக்கும், சின்னண்ணாவுக்கும் போட்டார். தம் கையில் போட்டிருந்த வைர மோதிரங்களையும் பரிசாகக் கொடுத்தார். மற்றொரு நாள் திடீரென்று தம் மனைவி