பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172


திருப்பூருக்கு நாங்கள் போனபோது தண்ணிர்ப் பஞ்சம் அதிகமாயிருந்தது. பல ஆண்டுகளாக மழையே இல்லை. எங்கு பார்த்தாலும் வறண்டு போயிருந்தது. காலையிலும் மாலையிலும் தண்ணிருக்காக நெடுந்துாரம் சென்று வருவோம். இறங்கிக் குளிக்கக் கூடிய முறையில் சில கிணறுகள் இருந்தன. சிலர் குளிக்க அனுமதிப்பார்கள். ஒருசிலர் கூடாதென்று மறுத்து விடுவார்கள். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி, இலவச டிக்கெட்டுகள் கொடுத்து, சிலரைச் சரிபடுத்திக் கொண்டோம்.

காக்கை வலிப்பு

கம்பெனியில் எம். சங்கரன் என்று ஒரு நடிகர் இருந்தார். அவர் பெண் வேடம் புனைபவர். அவருக்கு காக்கைவளி நோய் உண்டு. அது எதிர்பாராமல் திடீரென்று வந்துவிடும். அதுவும் தண்ணிர்த்துறைகளில்தான் இந்த நோய் பெரும்பாலும் வருவது வழக்கம். ஒருநாள் முற்பகலில் நாங்கள் எல்லோரும் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தோம். எம். சங்கரன் சாவ காசமாகவே எதையும் செய்வார். குளிப்பதிலும் அப்படித்தான். முதலில் ஒரு கிணற்றில் சீயக்காய் தேய்த்துத் தலையை நன்றாக அலசிவிட்டு, பிறகு அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் குளிக்க வேண்டும். எனவே நடிகர்கள் இரண்டு கிணற்றிலுமாகக் குளித்துக் கொண்டிருந்தோம்.

முதல் கிணற்றில் சங்கரனும், சின்னண்ணாவும் இன்னும் இரண்டொருவரும் மட்டுமே இருந்தார்கள். சங்கரன் திடீரென்று கை கால்களே அடித்துக்கொண்டு தண்ணிரில் மூழ்கினார்... ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்; மூழ்கியவர் வெளிவரவே இல்லை. பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பரபரப்படைந்தார்கள். சின்னண்ணா கொஞ்சம் துணிவுள்ளவர். மூழ்கிப் பார்த்தார். ஆழமான கிணறு. அடிப்புறத்தில் ஏதோ உருவம் கிடப்பது போல் புலப்பட்டது அவருக்கு. இரண்டாவது முறையும் மூழ்கித் துாக்கிப் பார்த்தார். முடியவில்லை. இதற்குள் செய்தியறிந்து பக்கத்துக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் ஓடி வந்தார்கள். வந்தவர்களில் கோபால் பிள்ளை மிகவும் தைரிய