பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திரைப்படமும் நாடகமும்

கோவையில்தான் முதன் முதலாகத் திரைப்படம் காண்பிக்கும் தியேட்டரில் நாடகம் நடித்தோம். மாலை 6.30 முதல் 9.மணி வரை மெளனப் படம் ஏதாவது நடைபெறும். அதன் பிறகு 9.30 க்கு நாடகம் தொடங்குவோம். நாங்கள் எல்லோரும் படம் பார்க்கும் ஆசையால் விரைவாகவே சாப்பிட்டுவிட்டுக் கொட்டகைக்கு வந்துவிடுவோம்.

வெரைட்டி ஹாலில் நாங்கள் நாடகம் நடத்திய சமயத்தில் ஆங்கில சீரியல் படங்கள் ஒடிக் கொண்டிருந்தன. வில்லியம் டெஸ்ட்மாண்ட் என்னும் நடிகர் நடித்த நீளப் படம் எங்களை மிகவும் கவர்ந்தது. ஒரு படத்திற்குச் சுமார் 60 சுருணைகள் இருக்கும். இந்தச் சுருணைகளை நான்கு பகுதிகளாக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு பாகத்தையும் ஒரு வாரம் போடுவார்கள். வெள்ளிக்கிழமை பாகம் மாற்றுவார்கள். பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மாதம் படத்தைப் பார்த்தால்தான் முழுக் கதையையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பகுதியும் முடியும் நேரத்தில் கதாநாயகனையோ, அல்லது கதாநாயகியையோ மிகவும் அபாயகரமான நிலையில் சிக்க வைத்துவிட்டு, அந்த அபாயத்திலிருந்து அவர்கள் எப்படித் தப்புகிறார்கள் என்பதைப் பார்க்கப் பொது ஜனங்களின் உணர்ச்சியைத் துண்டி விடுவார்கள். அடுத்த பகுதியை எப்போது பார்க்கப் போகிறோமென்று எங்களுக்கு ஏக்கமாக இருக்கும். நிகழ்ச்சி மாற்றத்தன்று சாப்பாட்டைக்கூட மறந்து விட்டு, முன்னாடியே சிலர் கொட்டகைக்கு வந்துவிடுவதுமுண்டு.

கடிகமணி சகஸ்ரநாமம்

கோவையிலிருந்தபோதுதான் நடிகமணி எஸ். வி. சகஸ்ர நாமம் கம்பெனியில் வந்து சேர்ந்தார். அவர் சேர்ந்ததே ஒரு சுவையான நிகழ்ச்சி. கம்பெனியில் பெற்றோர்கள் அனுமதி