பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184


யாராக இருந்தார். சிதம்பரநாதன் திறமையாக நடித்ததோடு அருமையாகவும் பாடினார். அந்த நாளில் பிரசித்தி பெற்றிருந்த டி. எஸ். வேலம்மாள், தாணுவம்மாள், டி. டி. ருக்மணி, எஸ். டி. சுப்புலட்சுமி, டி. பி. இராஜலட்சுமி, டி. ஆர். முத்துலட்சுமி, மிகவும் முதுமைப் பருவமடைந்த வி. பி. ஜானகியம்மாள் உள்ளிட்ட பெரிய நடிகையர் அனைவரும் சிதம்பரநாதனோடு சந்திரமதியாக நடித்திருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். நாடகம் முடிந்ததும் சிதம்பரநாதனப் பார்த்துப் பாராட்டிவிட்டு, திருப்பத்துாருக்குத் திரும்பினோம்.

சவுக்கடி சந்திரகாந்தா

வாத்தியார் ஏற்கெனவே பயிற்சி அளித்திருந்த சந்திர காந்தா நாடகத்தை நடத்த நாங்களே முயற்சித்தோம். ஓவியர் கே. மாதவன் அப்போது எங்கள் கம்பெனியில் இருந்தார். அவரிடம் அந்த நாளிலேயே அற்புதமாக வரையும் ஆற்றல் நிரம்பியிருந்தது. அவரைக்கொண்டு சந்திரகாந்தாவுக்குப்பெரும் பொருட் செலவில் காட்சிகளை உருவாக்கினோம்.நாடக ஒத்திகை தீவிரமாக நடந்தது. ஏராளமான புகைப்படங்கள் எடுத்துப் பிரமாத விளம்பரம் செய்யப் பெற்றது.

ஜே. ஆர். ரங்கராஜு

சந்திரகாந்தாவை நாவல் வடிவில் எழுதிய ஜே.ஆர். ரங்க ராஜூ நேரில் வந்து பார்த்துத்தான் அனுமதி கொடுப்பது வழக்கம். இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தி ஐந்து ரூபாய்களும், இராஜேந்திரா, சந்திரகாந்தா ஆகிய நாடகங்களுக்கு முப்பது ரூபாய்களும் அவருக்கு ‘ராயல்டி’ யாகக் கொடுக்க வேண்டும். அவர் சொல்வதுதான் சட்டம். நாடகத்தில் எந்த அம்சமாவது அவருக்குத் திருப்தியளிக்காவிட்டால் அனுமதி கொடுக்க மாட்டார். சந்திரகாந்தா நாடகத்திற்குத் தேதியும் போட்டுச் சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றன. நாடகங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஜே. ஆர். ரங்கராஜு வந்தார். அன்றே காலையிலும் மாலையிலுமாக உடைகளைப் போட்டுக் காட்சிகளுடன் ஒத்திகை நடத்திக் காண்பித்தோம். ஒத்திகை