பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186


தால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். தங்கை சுப்பம்மாள், சிற்றப்பா செல்லம்பிள்ளை இருவருக்கும் அம்மை போட்டிருந்தது. இன்னும் சில பையன்களும் அம்மை நோயால் அவஸ்தைப் பட்டார்கள். இந்த நிலையில்நாங்கள் பட்டாபிஷேகத்தை முடிக்காமல்கோவை நாடகத்தை நிறுத்திவிட்டோம். நோயுற்றவர்களையெல்லாம் கோவையிலேயே தங்கவைத்து, வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுக் கரூருக்கு வந்து சேர்ந்தோம். லஷுமணன் என்னும் ஒரு நடிகர் கம்பெனியில் இருந்தார். பெண்வேடம் புனைபவர். நன்றாக நடனம் ஆடக்கூடியவர். தாம்பாள நடனம் ஆடிக்கொண்டே புறா மாதிரி துணியில் புனைந்து காட்டுவார்; பரதநாட்டியம் போன்ற பல்வேறு நடனங்களையும் நன்றாக ஆடுவார்; நாடகத்திலும் பெண் வேடங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அவர் அம்மை நோய்க்கு அதிகமாகப் பயந்தவர். கரூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் லஷுமணன், “அப்பா! ஒரு வகையாக அம்மை நோயிலிருந்து தப்பிவிட்டேன்” என்று கூறினார். எல்லோரும் கம்பெனி வீடுவந்து சேர்ந்தோம். மறுநாட் காலையில் லஷுமணனுக்கு அம்மைக் கொப்பளங்கள் இருப்பதைக் கண்டு எல்லோரும் அதிசயித்துப் போனோம். அவர் முன்னாள் ரயில் நிலையத்தில் பேசியதின் விளைவே இது என்று பலபேர் அபிப்ராயப்பட்டார்கள். இதில் அம்மன் விளையாட்டு, தெய்வீக சக்தி என்பது மெய்யோ, பொய்யோ, ஆனால் லஷுமணன்மட்டும் அதுதெய்வசக்தியென்று: உறுதியாக நம்பிவிட்டார். அவரை, அடுத்த ரயிலில் கோவை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். கோவையில் எல்லோருக்கும் குணம் ஆயிற்று. ஆனால் லஷுமணன் அம்மை விளையாட்டுக்குப் பலியானார். கம்பெனி துவங்கியபின் அதுதான் முதல் மரணம். அவரை அடக்கம் செய்துவிட்டு, சிற்றப்பா முதலியவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

எஸ். என். இராமையா

கரூரில் நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. எங்கள் கம்பெனியில் அப்போது கதாநாயகனாகவேடம் புனைந்து வந்தவர் எஸ். என். இராமையா என்பதை முன்பே சொல்லி யிருக்கிறேன். சுவாமிகள் நாடகங்கள் எல்லாவற்றிலும் இவர் கதாநாயகனுக நடித்து வந்தார். மிக நன்றாகப் பாடக்